Advertisement
சைவம்

ஒரு தடவை இந்த மாதிரி கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த சாதத்துக்கு அடிமையாகிடுவீங்க!!!

Advertisement

பொதுவா நிறைய பேருக்கு பருப்பு சாதத்தில் நெய் ஊத்தி சாப்பிடறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படியே கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் முட்டை வறுவலும் வச்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும் ஒரு சிலருக்கு பிரியாணி கூட பிடிக்காது இந்த காம்பினேஷன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்படி பருப்பு சாதம் லவ்வர்ஸ் ஆகவேதான் இப்ப நம்ம இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் பாக்க போறோம். கொங்கு நாட்டு சைடுல எல்லாம் இந்த அரிசி பருப்பு சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் கூடவே கொஞ்சம் அப்பளமும் வச்சு கொடுத்தா ஒரு சூப்பரான லஞ்ச் அது இருக்கும்.

அந்த அளவுக்கு செம டேஸ்டான ஒரு லஞ்ச் தான் இந்த அரிசி பருப்பு சாதம். நம்ம இதை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்லயும் காலேஜ் படிக்கிறவங்களுக்கும் வேலைக்கு போறவங்களுக்கும் கூட டிபன் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம் அவங்க எல்லாரும் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு சாம்பார் பிடிக்கவே பிடிக்காது அவங்க எல்லாருக்கும் இந்த அரிசி பருப்பு சாதம் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா அவங்க இதுக்கு அடிமையாயிடுவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் இருக்கும்.

Advertisement

ஒருவேளை உங்க வீட்ல எந்த காய்கறியும் இல்ல அப்படின்னா சட்டுனு யோசிக்கவே யோசிக்காதீங்க இந்த அரிசி பருப்பு சாதம் செஞ்சுடுங்க. அரிசிக்கு ஏத்த மாதிரி கரெக்டான அளவுல பருப்பு சேர்த்து போட்டு இந்த அரிசி பருப்பு சாதம் வெச்சா அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பார்த்தால் அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். இந்த அரிசி பருப்பு சாதத்தை சூடா ஆவி பறக்க பறக்க சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.இப்ப வாங்க இந்த சூப்பரான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

அரிசி பருப்பு சாதம் | Arisi Paruppu Saadham Recipe In Tamil

Advertisement
Print Recipe
உங்க வீட்ல எந்த காய்கறியும் இல்ல அப்படின்னா சட்டுனு யோசிக்கவே யோசிக்காதீங்க இந்த அரிசி பருப்பு சாதம் செஞ்சுடுங்க. அரிசிக்கு ஏத்த மாதிரி கரெக்டான அளவுல பருப்பு சேர்த்து போட்டு இந்த அரிசி பருப்பு சாதம் வெச்சா அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பார்த்தால் அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல
Advertisement
அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். இந்த அரிசி பருப்பு சாதத்தை சூடா ஆவி பறக்க பறக்க சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.இப்ப வாங்க இந்த சூப்பரான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Arisi Paruppu Sadham
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 210

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் அரிசி
  • 1/4 கப் பாசிப் பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பச்சைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

Instructions

  • முதலில் ஒரு கப் அரிசியுடன் பருப்பையும் சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  • ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்
     
  • பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து கலந்து விடவும் பிறகு நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்
  • தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளவும்
  • இரண்டு விசில் விட்டு விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கம கம அரிசிபருப்பு சாதம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 210kcal | Carbohydrates: 92g | Protein: 4.2g | Sodium: 162mg | Potassium: 391mg
Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago