ஆஷாட நவராத்திரி 2024 எப்போது? அதன் வழிபாட்டு முறைகள்!!

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சக்தி வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. ஆனி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, நவமி வரையிலான காலம் ஆஷாட நவராத்திரி காலமாகும்

By Prem Kumar · 7/7/2024

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சக்தி வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. ஆனி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, நவமி வரையிலான காலம் ஆஷாட நவராத்திரி காலமாகும். ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதமாகும். கையில் கலப்பை ஏர் என்று விவசாயம் தொடர்பான கருவிகளை வைத்திருக்கும் தெய்வமாகவும் இந்த வாராகி அம்மன் திகழ்கிறார்.

இந்த தெய்வத்தை விவசாயிகள் வழிபடுவதன் மூலம் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் பஞ்சமி திதியின் வாராஹி அம்மனை வழிபட்டு அவரிடம் என்ன கோரிக்கை முன் வைக்கிறோமோ அது அப்படியே நடக்கும் என பிரமாண்ட புராணம் சொல்கிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்கு உரித்தான ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வீட்டில் எந்த முறையில் எளிமையாக வழிபாடு மேற்கொள்ளலாம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ஆஷாட நவராத்திரி என்றால் என்ன?

அம்பாளை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏற்ற காலங்களில் மிக விசேஷமானது நவராத்திரி காலமாகும். வசந்த நவராத்திரி, சியாமளா நவராத்திரி, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் ஆனி மாதத்தில் வருவது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணித முறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். இது ஆனி – ஆடி மாதங்களில் புதுப்புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்கின்ற காலம். வட மாநிலங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரியை சாகம்பரி நவராத்தி அல்லது காயத்ரி நவராத்திரி என்றும் சொல்லுவதுண்டு.

ஆஷாட நவராத்திரி 2024

இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி ஜூலை 6 சனிக்கிழமை தொடங்கி ஜூலை 15 திங்கள் வரை தொடரும். இந்த வருடம் சதுர்த்தி திதி அதிகரிப்பதால் நவராத்திரி 10 நாட்கள் தொடரும்.

ஜூலை 6 – ஷைல்புத்ரி தேவி வழிபாடு

ஜூலை 7 – பிரம்மச்சாரிணி தேவி வழிபாடு

ஜூலை 8 – தேவி சந்திரகாந்த வழிபாடு

ஜூலை 9 – குஷ்மாண்டா தேவி வழிபாடு

ஜூலை 10 – சதுர்த்தி வழிபாடு

ஜூலை 11 – ஸ்கந்தமாதா தேவி வழிபாடு

ஜூலை 12 – காத்யாயனி தேவி வழிபாடு

ஜூலை 13 – காலராத்ரி தேவி வழிபாடு

ஜூலை 14 – மகாகௌரி தேவி வழிபாடு

ஜூலை 15 – தேவி சித்திதாத்ரி வழிபாடு

நவராத்திரி வழிபாட்டு முறை

இந்த நவராத்திரி வழிபாட்டை மேற்கொள்பவர்கள் வீட்டில் கலசம் அமைத்தும் வழிபடலாம், அமைக்காமலும் வழிபாடு மேற்கொள்ளலாம். ஆனால் கலசம் அமைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, வழிபடும் போது வீட்டில் வளர்ச்சி என்பது ஏற்படும். ஆஷாட நவராத்திரி வழிபாட்டை மேற்கொள்பவர்கள் காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, கோலம் போட்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வராஹி அம்மன் படத்திற்கு பூக்கள், குங்குமம், மஞ்சள் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பின் விளக்கேற்றி, “ஓம் வாராகி அம்மனே போற்றி ஓம் வராகி அம்மனே வருக வருக” என்று சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு மேற்கொள்ளலாம். இந்த நவராத்திரி நாட்களில் வராஹி அம்மனுக்கு பிடித்த உணவுகளை நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம். இந்த நவராத்திரி காலத்தில் வராஹி அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டால் அம்பாளின் பரிபூரண அருளை பெறுவதுடன், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

வராஹி வழிபாடு

மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க அன்னை வாராஹியின் அருள் கட்டாயம் தேவை என்பதால் ஆஷாட நவராத்திரி நேரத்தில் அன்னை வாராஹி தேவியை குடும்பத்தோடு வழிபடலாம். தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இந்த நவராத்திரி நாளில் வாராஹி அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இந்த நாளில் இந்த தாயை வணங்குவதால் எதிரிகள் தொல்லை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீயசக்திகளின் பிடியில் இருந்து விடுபட முடியும்.

இதனையும் படியுங்கள் : மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

Recipes AMP · Quick view
View full