வார ராசிபலன் 03 ஆகஸ்ட் 2025 முதல் 09 ஆகஸ்ட் 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 6-ம் இடத்திலுள்ள ராசி அதிபதி புதிய பொறுப்புகளை தருவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெறுவது குறித்த செய்திகளை பெறுவர். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ச

By ·

மேஷம்

இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 6-ம் இடத்திலுள்ள ராசி அதிபதி புதிய பொறுப்புகளை தருவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெறுவது குறித்த செய்திகளை பெறுவர். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் இருக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்க அமைப்புள்ளது. சிலருக்குப் பணி நிரந்தரமாகும். எதிரி பற்றிய பயம் உண்டாகும். மறைமுகத் தொல்லை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரியங்களைச் செய்யும் பொழுது சிறிய தடைகள் ஏற்படலாம். அதிக அலைச்சலும் உழைப்பும் உண்டு.

ரிஷபம்

இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு 2-ம் இடத்தில் உள்ள ராசி அதிபதி சுபர் சேர்க்கை பெறுவதால் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை, சுற்றுலா யோகம் உண்டு. அரசு உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் லாங்வேஜ் கற்றுக்கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிலவும். சுபச் செலவுகள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெறும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் உண்டு. பெற்றோர் வழியில் பிரச்னைகள் உண்டு. பூர்வீகச் சொத்தில் மனக்கஷ்டங்கள் ஏற்படலாம்.

மிதுனம்

இந்த வாரம் மிதுனம் ராசியினருக்கு 2-ல் சூரியனோடு உள்ள ராசியதிபதி செல்வாக்கை தருவார். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுதுவர். தொழில்நுட்ப நண்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எடுத்த வேலை முடியும். வியாபாரம், தொழிலில் வருமானம் கூடும். சகோதரர்கள் உதவி செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவு நனவாகும். கோபத்தையும் அவசரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எழும். பிறர் விஷயத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிட வேண்டாம்.

கடகம்

இந்த வாரம் கடகம் ராசியினருக்கு 12-ம் இடம் சுப பலம் பெறுவதால் வீடு, மனை யோகம் உண்டு. அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமைக்கேற்ற ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் குறித்து ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசனை செய்வது நல்லது. தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். சென்ற வாரத்தில் இருந்த சில கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பாராத நன்மையும் உண்டு. சில அலைச்சல்களும் பிரயாணங்களும் உண்டு என்றாலும், அதில் ஆதாயம் உண்டு. வெளியில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னையைக் கையாளுங்கள்.

சிம்மம்

இந்த வாரம் சிம்மம் ராசியினர் 11-ம் இடத்திலுள்ள சுப கிரகங்களால் எதிர்கால நலனுக்கு உரிய விஷயங்களை செயல்படுத்துவர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வர். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். சுபகாரியங்கள் பலிதமாகும். குடும்ப பிரச்னைகளை புத்திசாலித்தனமாகக் கையாளுங்கள்.

கன்னி

இந்த வாரம் கன்னி ராசியினருக்கு 11-ல் உள்ள ராசி அதிபதி காரிய தடைகளை விலக்கி நன்மை தருவார். எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், நன்மையும் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவை கிடைக்க வாய்ப்புண்டு. தேவையில்லாத அதிகப்படியான விஷயங்களையும் எதிர்மறை கருத்துக்களையும் கூற வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. புது முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.

துலாம்

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு 9-ல் இல்ல ராசி அதிபதி உற்றார், உறவினர், நண்பர்கள் மூலம் மன உற்சாகம் தருவார். தனியார் துறை மேலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மையை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாக சுற்றுலா செல்வர். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள், துணிமணிகள் வாங்க வாய்ப்புண்டு. குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். பழைய கடன்களும் அடைபடும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். அரசாங்க காரியங்களில் சாதகம் உண்டு. தொழில் போட்டிகள் கடுமையாக இருக்கும். சொத்து பிரச்னைகளில் தாமதம் நீடிக்கும். சாதகமாக முடிவது சற்று சிரமம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிகம் ராசியினருக்கு 11-ல் உள்ள ராசியதிபதி குடும்ப பொருளாதாரம், சமூக மதிப்பு ஆகியவற்றை அளிப்பார். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்ப பயிற்சி பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவர். நிலம் வீடு முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். வீடு கட்டும் முயற்சி பலிக்கும். மனை வாங்கிப் போடுவதாக இருந்தால், அதற்காக வாய்ப்பு வந்து சேரும். ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் வெளிச்சம் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். செலவுகளை கவனித்துச் செய்யவும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு

இந்த வாரம் தனுசு ராசியினருக்கு 7-ல் உள்ள ராசியதிபதியால் பண வரவும், மனதிடமும் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் பெற தக்க ஆலோசனை கிடைக்க பெறுவர். செலவுகள் அதிகரித்தாலும் சிக்கனத்திற்கு வழி கிடைக்கும். அலுலகத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரும் பாராட்டுகளும் கிடைக்கும். நண்பர்கள் தங்கள் தேவை அறிந்து உதவ முன்வருவார்கள். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். வருமானம் போதிய அளவு உண்டு. அலுவலகத்தில் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு அங்கீகாரமும் நல்ல பெயரும் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த சன்மானம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்

இந்த வாரம் மகரம் ராசியினருக்கு 3-ல் உள்ள ராசியதிபதி செவ்வாய் பார்வை பெறுவதால் கூடுதல் உழைப்பின் மூலம் ஆதாயம் தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வேலை பயணம் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். சிலருக்கு பொருளாதாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். வரவை விட செலவு அதிகரிக்கலாம். கடன்கள் வாங்க நேரிடலாம். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். தொழில் போட்டிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகம் இருக்கும்.

கும்பம்

இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு பொருளாதார நிலையில், உறவுகளிடையே உயர்வு ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நேரடியாக களமிறங்கி செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்ப கற்றலுக்காக வெளியூர் செல்வர். அரசாங்க அனுகூலம் உண்டு. வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கலைத்துறை சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. குடும்ப பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். சகோதர உறவுகள் கருத்து வேறுபாடுகளைத் தந்து மன அமைதியைக் குறைக்கும். எதிலும் கவனமும் பொறுமையும் இந்த நேரத்தில் தேவை.

மீனம்

இந்த வாரம் ராசி அதிபதி இணைவதால் தடங்கல் விலகி சுபகாரியங்கள் நடைபெறும். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரி தொடர்பால் நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் வென்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். வருமானம் ஓரளவு இருக்கும் ஆனால் சேமிப்புக்கு வழி இருக்காது. சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். கவனம் சிதறாமல் அன்றாடப் பணிகளைச் செய்வதன் மூலம் சிரமத்தைக் குறைத்துக் கொள்ளலாம். பிரச்னைகள் தலைமாட்டில் இருப்பதால் நீங்களே அதில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றியை பெறப்போகும் சில ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full