மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கப் போகிறது. பொதுவாக ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது அனைத்து ராசியினருக்கும் அந்த தாக்கம் ஏற்படும் ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டும் நல்லது நடக்கும். அப்படி வாழ்க்கையில் வெற்றியை பெறப்போகும் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்கலமான பலன்கள் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். அதிர்ஷ்டம் பெருகி பண வாய்ப்புகள் அதிகரிக்கும். பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் நல்ல பலனை கொடுக்கும் நிதி ஆதாயங்கள் உண்டாகும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நல்ல பலனை தரும் செல்வம் அதிகரிக்கும். பதவி மற்றும் சமுதாயத்தில் கௌரவம் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்கி லாபம் அடைவீர்கள் வியாபாரத்திலும் கூட நல்ல லாபத்தை அடைவீர்கள்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். சில நல்ல செய்திகளை பெறலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை முன்னேற்றம் அடையும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பை கொடுக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தொழிலில் வெற்றி பெருகும். பொருளாதார நிலை வலுவடையும் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி புகழை தேடித்தரும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும் அதனால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும் கௌரவம் அதிகரிக்கும். குருவின் ஆசியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கல்வியில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் திருமணம் நன்றாக நடைபெறும். நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும். பெரிய நன்மைகள் எல்லாம் கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். கௌரவமான விருதுகளை பெறுவீர்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் பொற்காலத்தை பெறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!


