Advertisement
ஸ்வீட்ஸ்

வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

எப்போவுமே நம்ம ரவை வச்சு தான் கேசரி செய்வோம். நம்ம வீட்ல என்ன விசேஷங்கள் பண்டிகைகள் வந்தாலும் நம்ம மைண்ட்ல வர்ற முதல் ஸ்வீட் என்னன்னா அது கேசரி தான். ரவையை வறுத்து நெய் சொட்டு சொட்ட முந்திரி பருப்பு ஏலக்காய் எல்லாம் போட்டு செய்கிற ரவை கேசரி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும்.

ஆனா எப்பவுமே ரவை வச்சு கேசரி செய்யாம ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமா உங்க வீட்ல அவல் இருந்தா அவல் வச்சு கேசரி செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். அவல நல்லா வறுத்து அரைச்சு பொடி செஞ்சு செய்ற இந்த கேசரி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இதுலயும் நிறைய நெய் ஊத்தி முந்திரி பருப்பு தாராளமா சேர்த்து செஞ்சா சாப்பிடுவதற்கு ரொம்ப புடிக்கும் குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டா வீட்ல ரவை சேமியா எதுவுமே இல்ல ஆனா அவல் மட்டும் இருக்கு அப்படின்னா அவல் கேசரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு ரெசிபி கேட்டுட்டு போவாங்க. ரொம்பவே சட்டுனு செய்யக்கூடிய இந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சாப்பிடப்படும். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும் நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தாலும் இந்த கேசரியை செஞ்சு சாப்பிட்டு ஜாலியா இருங்க இப்ப வாங்க இந்த அவல் கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அவல் கேசரி | Aval Kesari Recipe In Tamil

Print Recipe
Advertisement
வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டா வீட்ல ரவை சேமியா எதுவுமே இல்ல ஆனா அவல் மட்டும் இருக்கு அப்படின்னா அவல் கேசரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு ரெசிபி கேட்டுட்டு போவாங்க. ரொம்பவே சட்டுனு செய்யக்கூடிய இந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சாப்பிடப்படும். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும் நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தாலும் இந்த
Advertisement
கேசரியை செஞ்சு சாப்பிட்டு ஜாலியா இருங்க இப்ப வாங்க இந்த அவல் கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course deserts, sweets
Cuisine tamil nadu
Keyword Aval Kesari
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings 4
Calories 113

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் அவல்
  • 2 கப் சர்க்கரை
  • நெய் தேவையான அளவு
  • 7 முந்திரி பருப்பு
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

Instructions

  • ஒரு கடாயில் அவலை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுக்கவும்
  • ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து அவல் குங்குமப்பூ கேசரி பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்
  • பிறகு சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்த கிளறவும் இடையிடையே நெய் சேர்த்தும் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
  • நன்றாக வெந்ததும் ஏலக்காய் பொடி நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கினால் சுவையான அவல் கேசரி தயார்

Nutrition

Serving: 150g | Calories: 113kcal | Carbohydrates: 46g | Protein: 23g | Sodium: 18mg | Potassium: 62mg | Calcium: 11.1mg

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ரோஸ் மில்க் பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

7 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

11 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

11 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

22 மணி நேரங்கள் ago