ருசியான பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!

- Advertisement -

நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவு வகை. பாக்கெட்டுகளில் விதவிதமான பெயர்களில் அடைத்து விற்கப்படும் நூடுல்ஸ், மசாலா கலவை பாக்கெட்டுகள் இலவசமாக கொண்ட நூடுல்ஸ்களை நாம் வாங்கி சாப்பிடுவதை விட வெறும் நூடுல்ஸ் வாங்கி அதில் நாமே வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அதற்கான செய்முறை பதிவு தான் இது.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ் | Baby Corn Veg Noodles Recipe in Tamil

நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைஅனைவருக்குமே மிகவும் பிடித்த உணவு வகை. வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நன்மைதரும். அதற்கான செய்முறை பதிவு தான் இது.
Prep Time15 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: china, tamilnadu
Keyword: Baby Corn Veg Noodles
Yield: 4
Calories: 188kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1/2 கப் பேபி கார்ன் ஓரளவு நீளமாக வெட்டியது
  • 1/4 கப் குடைமிளகாய் நறுக்கியது
  • 2 டீஸ்பூன் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1/2 டீஸ்பூன் வெள்ளை வினிகர்
  • 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • ஸ்பிரிங் ஆனியன் சிறிது
  • 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபிகார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்,
  • பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபிகார்ன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விடவேண்டும்.
  • பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ரெடி!!!'

Nutrition

Serving: 250g | Calories: 188kcal | Carbohydrates: 27g | Protein: 4g | Sodium: 861mg | Fiber: 0.9g
- Advertisement -