அடுத்தமுறை காளான் வாங்கினால் இந்த பாதாம் காளான் கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் காளான் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் காளான் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம் காளான் கிரேவி செய்யுங்கள். சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது, அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான். காளான் ஒரு சத்தான உணவுப் பொருள்.
இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பாதாம் காளான் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். சுவையாக அதேசமயம் எளிய முறையில் பாதாம் காளான் கிரேவி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!