ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். அதுவும் ‌பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம். இந்த தருணத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்ததையே அடிக்கடி செய்து சாப்பிட்டால் போர் அடிக்கும். அதனால் சற்று வித்தியாசமாக காளான் போண்டா செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

வழக்கமாக உருளைக்கிழங்கு, முட்டை போன்றவை வைத்து தான் போண்டா செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் காளான் வைத்து சூப்பரான சுவையில் காளான் போண்டா ரெசிபியை காண உள்ளோம். அதுதான் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

- Advertisement -

இந்த காளான் போண்டா ஒரு நல்ல வித்தியாசமான ட்ரை என்று சொல்லலாம். மேலும் இது மொறுமொறுவென்று இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவைரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரொம்பவே விரும்புவார்கள். இந்த காளான் போண்டாவை தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

Print
4 from 1 vote

காளான் போண்டா | Mushroom Bonda Recipe In Tamil

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். அதுவும் ‌பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம். இந்த தருணத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்ததையே அடிக்கடி செய்து சாப்பிட்டால் போர் அடிக்கும். அதனால் சற்று வித்தியாசமாக காளான் போண்டா செய்து பாருங்கள். வழக்கமாக உருளைக்கிழங்கு, முட்டை போன்றவை வைத்து தான் போண்டா செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் காளான் வைத்து சூப்பரான சுவையில் காளான் போண்டா ரெசிபியை காண உள்ளோம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Mushroom Bonda
Yield: 3 People
Calories: 113kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் காளான்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் புட் கலர்

செய்முறை

  • முதலில் காளானை நன்கு கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, நறுக்கி வைத்துள்ள காளான், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், புட்‌ கலர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள போண்டா மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான காளான் போண்டா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 113kcal | Carbohydrates: 4.1g | Protein: 2.8g | Fat: 2.5g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 1.82g | Vitamin C: 2.1mg | Calcium: 18mg | Iron: 2mg

இதனையும்‌ படியுங்கள் : இந்த மழைக்கு இதமா ருசியான காளான் வாழைத்தண்டு சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!