கம்பு மாவில் பூரி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க! செம சூப்பரா இருக்கும்!

- Advertisement -

சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி கம்மியா இருக்குமா? என்று கேட்காதீங்க. இதோட ருசி நல்லாதாகங்க இருக்கும். 

-விளம்பரம்-

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது என்பதை எத்தனை முறை நினைவுபடுத்தினாலும், அரிசி செய்யப்படும் இட்லி தோசை பொங்கல் பூரி தான் நம் கண்முன்னே வந்து நிற்கின்றது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவையில் சேர்த்துக் செய்து பாருங்கள் . அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஆரோக்கியமான கம்பு பூரிதோசை செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -
Print
No ratings yet

கம்பு பூரி | Bajra Poori Recipe In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை நம்முடையஉணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது என்பதை எத்தனை முறை நினைவுபடுத்தினாலும்,அரிசி செய்யப்படும் இட்லி தோசை பொங்கல் பூரி தான் நம் கண்முன்னே வந்து நிற்கின்றது.இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை இட்லி தோசைபொங்கல் பூரி போன்றவையில் சேர்த்துக் செய்து பாருங்கள் . அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஆரோக்கியமான கம்பு பூரிதோசை செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தபதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Bajra Poori
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கம்பு மாவு
  • 1 டீஸ்பூன் வெள்ளை எள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் மாங்காய்த் தூள்
  • 2 கட்டு வெந்தயக் கீரை
  • 1/2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரை
  • மஞ்சள் தூள் சிறிது
  • 1 டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • உப்பு தேவைக்கு
  • தண்ணீர் தேவைக்கு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியாத் தூள்

செய்முறை

  • வெந்தயக்கீரையை காம்பு இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை. பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
  • கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்
  • பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும்
  •  
    பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும். இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொறு பூரிகளாக போட்டு பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரித்து எடுக்கவும். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்
  • சூப்பரான பாஜரா பூரி ரெடி

செய்முறை குறிப்புகள்

 
இந்த பூரிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடலாம்
 

Nutrition

Serving: 2g | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 1g | Calcium: 28mg