வெயிலுக்கு உடல் சூட்டை தணிப்பதற்கு ஆரோக்கியமான இந்த கம்பு ரவை உப்புமாவை செய்து சாப்பிடுங்கள்!!!

தானிய வகைகளிலே கம்பும் சத்து நிறைந்த ஒன்று தான் ஆனால் இதை பெரும்பாலும் யாரும் அதிகம் உண்பதில்லை. அதிலும் குழந்தைகள் இந்த கம்பில் எதை செய்து கொடுத்தாலும் தொடக் கூட மாட்டார்கள். ஆகையால் கம்புவை வைத்து அதில் சிறிது ரவை சேர்த்து ஒரு அருமையான உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிட

By ·

தானிய வகைகளிலே கம்பும் சத்து நிறைந்த ஒன்று தான் ஆனால் இதை பெரும்பாலும் யாரும் அதிகம் உண்பதில்லை. அதிலும் குழந்தைகள் இந்த கம்பில் எதை செய்து கொடுத்தாலும் தொடக் கூட மாட்டார்கள். ஆகையால் கம்புவை வைத்து அதில் சிறிது ரவை சேர்த்து ஒரு அருமையான உப்புமா  செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

பலருக்கு வீட்டில் இருந்தாலும் உடலில் சூடு தன்மை அதிகமாகிறது. அதிலும் வெளியில் சென்று வருபவர்களுக்கு இன்னும் அதிகமாக உடலில் சூடு பிடித்துக் கொள்கிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, அடி வயிறு வலிப்பது, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலச்சிக்கல் தொல்லை இது போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

உடல் சூட்டை தணிப்பதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பழ வகைகள் சாப்பிட வேண்டும். அதிலும் நாம் உண்ணும் உணவு இப்பொழுது இருக்கும் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்காக வாரத்தில் இரண்டு முறையாவது கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவை காலை உணவாக கம்பு வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான கம்பு ரவை உப்புமாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை