வெயிலுக்கு உடல் சூட்டை தணிப்பதற்கு ஆரோக்கியமான இந்த கம்பு ரவை உப்புமாவை செய்து சாப்பிடுங்கள்!!!

- Advertisement -

தானிய வகைகளிலே கம்பும் சத்து நிறைந்த ஒன்று தான் ஆனால் இதை பெரும்பாலும் யாரும் அதிகம் உண்பதில்லை. அதிலும் குழந்தைகள் இந்த கம்பில் எதை செய்து கொடுத்தாலும் தொடக் கூட மாட்டார்கள். ஆகையால் கம்புவை வைத்து அதில் சிறிது ரவை சேர்த்து ஒரு அருமையான உப்புமா  செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

பலருக்கு வீட்டில் இருந்தாலும் உடலில் சூடு தன்மை அதிகமாகிறது. அதிலும் வெளியில் சென்று வருபவர்களுக்கு இன்னும் அதிகமாக உடலில் சூடு பிடித்துக் கொள்கிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, அடி வயிறு வலிப்பது, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலச்சிக்கல் தொல்லை இது போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

- Advertisement -

உடல் சூட்டை தணிப்பதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பழ வகைகள் சாப்பிட வேண்டும். அதிலும் நாம் உண்ணும் உணவு இப்பொழுது இருக்கும் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்காக வாரத்தில் இரண்டு முறையாவது கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவை காலை உணவாக கம்பு வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான கம்பு ரவை உப்புமாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
2 from 1 vote

கம்பு ரவை உப்புமா | Bajra Rava Uppuma Recipe In Tamil

உடல் சூட்டை தணிப்பதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். பழ வகைகள் சாப்பிட வேண்டும். அதிலும் நாம் உண்ணும் உணவு இப்பொழுது இருக்கும்உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்காக வாரத்தில்இரண்டு முறையாவது கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.எனவை காலை உணவாக கம்பு வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான கம்பு ரவை உப்புமாவை எவ்வாறுசெய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Bajra Rava Uppuma
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய வெங்காயம்
  • 2 வரமிளகாய்
  • இஞ்சி சிறிது
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • பெருங்காயத்தூள் சிறிது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கேரட்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கம்பு ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  •  
    பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், கேரட் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.
  •  
    வெங்காயம், கேரட் துருவல் நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 11/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டும்.
  • இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி. இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 1g | Calcium: 28mg