Advertisement
சைவம்

ருசியான வெஜ் பிரியாணி சாப்பிட நினைத்தால் இப்படி ஒரு தரம் வாழைப்பூ பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

நாம பல வகை பிரியாணிகள் சுவைத்திருப்போம். அந்த பிரியாணியில சைவ பிரியாணி அசைவ பிரியாணிகளும் இருந்திருக்கும். இப்படி சுவையான பல பிரியாணியில் செய்து சாப்பிட்டு இருக்கும் போது காய்கறிகள் பயன்படுத்தி நிறைய சைவ பிரியாணிகள் தான் இப்போ விருப்பமா செய்துட்டு இருக்காங்க. அப்படி இன்னைக்கு நம்ம பண்ண போற ஸ்பெஷலான ஒரு பிரியாணி என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா வாழைப்பூ பிரியாணி. வாழைப்பூவில் ரொம்ப வேறு நிறைய உணவுகள் செய்திருப்போம். வாழைப்பூ கூட்டு, பொரியல், சாம்பார் கூட செய்து சாப்பிட்டு இருப்போம்.

இந்த மாதிரி சுவையான வாழைப்பூவில் வடை கூட செய்றாங்க. அப்படி வாழைப்பூவில் பல உணவுகள் இருக்கும் பொழுது நம்ம ஏன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்க கூடாது. இந்த வாழைப்பூவை சிலர் இந்த மாதிரி வடை, கூட்டு, பொரியல், சாம்பார் செய்யும் போது சாப்பிடாதவர்கள் கூட பிரியாணி அப்படின்னு நம்ம செய்து சாப்பிட்ட கொடுக்கும் போது யாருமே வாழைப்பூவ வேண்டாம் அப்படின்னு சொல்லாம நல்லாவே சாப்பிடுவாங்க. அதனால வாழைப்பூவில் இருக்கிற நிறைய சத்துக்கள் நமக்கு அப்படியே கிடைச்சிடும். வாழைப்பூவை பொறுத்த வரைக்கும் அது ஒரு அனைத்து ஊட்டச்சத்துகளோட கூட்டு அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அதுல விட்டமின்ஸ் இருக்குது இரும்புச்சத்து, நார்ச்சத்து எல்லாமே நிறைய இருக்கு.

Advertisement

இது உடலுக்கு ரொம்பவே நன்மை பயக்கக் கூடியது. அந்த அளவுக்கு வாழை பூவுல அதிக அளவு சத்துக்கள் இருக்கு இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவ உணவுகளில் ஏதோ ஒரு வகையில் சேர்த்து சாப்பிடணும் அப்படின்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. ஆனால் இந்த வாழைப்பூவை சாப்பிட விரும்பாத குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க. அவர்களுடைய விருப்பத்துக்காக நம்ம வாழைப்பூவை பிரியாணியா செய்து சாப்பிட கொடுக்கும் போது அது ரொம்பவே நல்ல சுவையாக இருக்கிறது மட்டும் இல்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவை மிக்க ஆரோக்கியமிக்க வாழைப்பூ பிரியாணியை எப்படி சமைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

வாழைப்பூ பிரியாணி | Banana flower Biryani Recipe In Tamil

Print Recipe
உடலுக்கு ரொம்பவே நன்மை பயக்கக் கூடியது. அந்த அளவுக்கு வாழை பூவுல அதிக அளவு சத்துக்கள் இருக்கு இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவ உணவுகளில் ஏதோ ஒரு வகையில் சேர்த்து
Advertisement
சாப்பிடணும்அப்படின்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. ஆனால் இந்த வாழைப்பூவை சாப்பிட விரும்பாத குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க. அவர்களுடைய விருப்பத்துக்காக நம்ம வாழைப்பூவை பிரியாணியா செய்துசாப்பிட கொடுக்கும் போது அது ரொம்பவே நல்ல சுவையாக இருக்கிறது மட்டும் இல்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவை மிக்க ஆரோக்கியமிக்க வாழைப்பூ பிரியாணியை எப்படிசமைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Banana Flower Biryani
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings
Advertisement
4
Calories 185

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 கப் வாழைப்பூ
  • 2 வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,ஒரு வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவேண்டும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு, வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பின்பு அதில் அறிந்து வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும்.தக்காளிப்பழம் நன்றாக வதங்கிய பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  •  பிறகு இதில் தயிர், புதினா, கொத்தமல்லி தழைகள் சேர்த்துநன்றாக கலந்து விட்டு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்று அளவிற்கு நீர் விட்டுநன்றாக கலந்து விட வேண்டும்
  • தண்ணீர் கொதித்து வந்த பிறகு அதில் ஊற வைத்து எடுத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு மூடிபோட்டு  3 விசில் விட்டு  எடுத்தால் சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 185kcal | Carbohydrates: 20g | Protein: 5g | Fat: 1g | Sodium: 46mg | Potassium: 267mg

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிரா ஸ்டைலில் ருசியான கருப்பு சுண்டல் புலால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஆஹா இதன் ருசி வேற லெவல்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

14 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

20 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago