மகாராஷ்டிரா ஸ்டைலில் ருசியான கருப்பு சுண்டல் புலால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஆஹா இதன் ருசி வேற லெவல்!

- Advertisement -

புலாவ் அப்படின்னா எட்டடி தூரம் தள்ளி போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த சூப்பரான புலாவ். இந்த புலாவ் மகாராஷ்டிரா ரொம்பவே ஃபேமஸான ஒரு புலாவ் . புலாவ் புடிக்காதவங்க கூட இந்த புலாவ் எக்ஸ்ட்ரா வேணும் அப்படின்னு சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அப்படி என்ன புலாவ் அப்படின்னு பார்த்தீங்கன்னா காலா சன்னா அதாவது கருப்பு கொண்டைக்கடலையில் செய்த புலாவ். இந்த புலாவ் ருசியானது மட்டும் கிடையாது ரொம்ப ஆரோக்கியமானது கூட. இந்த சுவையான காலா சன்னா புலாவ் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். எப்போதும்  பண்ற புலாவை விட இந்த புலால எக்ஸ்ட்ராவா ஒரே ஒரு மசாலாவை சேர்த்து பண்ண போறோம். அதுவும் நம்ம எப்போதுமே யூஸ் பண்ற அதே பொருளை வைத்து தான். வேறு எந்த ஒரு பொருளும் புதுசா சேர்க்க போறது கிடையாது .

-விளம்பரம்-

இந்த சுவையான காலா சன்னா புலாவ் ரொம்பவே ருசியா இருக்கறது மட்டும் இல்லாம உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்க கூடியதா இருக்கும். இதுல கருப்பு கொண்டைக்கடலை இருக்குறதுனால அதிக அளவு புரோட்டீனும் நார்ச்சத்தும் இதுல நிறையவே கிடைக்க இருக்கு. நீங்க ஹெல்தியாவும் கொடுக்கணும் அதே நேரம் ரொம்ப ருசியாவும் இருக்கணும் குழந்தைங்க விரும்பி சாப்பிடணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த மாதிரி காலா சன்னா புலாவ் செய்து கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பியும் சாப்பிடுவாங்க . ஆரோக்கியமான உணவாகவும் அது இருக்கும். குழந்தைகளுக்கு வளர்ச்சியில் புரோட்டின் ரொம்பவே முக்கியமான பங்கு வருகிறதுனால நீங்க இந்த காலா சன்னா புலாவ் செய்து கொடுக்கும்போது அது ரொம்பவே நல்லா இருக்கும். ரொம்பவே சுவையான இந்த புலாவ் மகாராஷ்டிரா ஸ்டைல்ல எப்படி டேஸ்டியா பண்ணி கொடுக்கிறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இப்படி சுவையா ரொம்ப ருசியா செய்யக்கூடிய இந்த காலா சன்னா புலால் உங்க குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்களுக்கு புலாவுல நீங்க எப்பவுமே வச்சு கொடுக்குற வெஜிடபிள்ஸ் இல்ல வேற ஏதாவது பொருட்களை விட நீங்க கொண்டக்கடலையை வச்சு செஞ்சு கொடுக்கும்போது அது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் என்னன்னா நம்ம எவ்வளவு கொண்ட கடலைகளை சேர்த்தாலும் அது சாப்பாடு முழுவதும் கலந்து இருக்கும். சாப்பிடும்போது ஒரு ஒரு வாய்க்குமே அந்த கொண்டைக்கடலையோட பிளேவர் வந்து நமக்கு கிடைச்சிகிட்டே இருக்கும் அதனால அவங்களுக்கு இந்த கொண்டைக்கடலை புலாவ் ரொம்பவே பிடிக்கும். அதுவும் கருப்பு கொண்டைக்கடலை இருக்கிற சத்துக்கள் ரொம்பவே அதிகம். இந்த கருப்பு கொண்டை கடலையில புலாவ் செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க இந்த சுவையான மகாராஷ்டிரா ஸ்டைலில் கருப்பு காலா சன்னா புலாவ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

காலா சன்னா புலால் | Kala Channa pulao in tamil

புலாவ் அப்படின்னா எட்டடி தூரம் தள்ளி போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த சூப்பரான புலாவ். இந்த புலாவ் மகாராஷ்டிரா ரொம்பவே ஃபேமஸான ஒரு புலாவ் . புலாவ் புடிக்காதவங்க கூட இந்த புலாவ் எக்ஸ்ட்ரா வேணும் அப்படின்னு சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அப்படி என்ன புலாவ் அப்படின்னு பார்த்தீங்கன்னா காலா சன்னா அதாவது கருப்பு கொண்டைக்கடலையில் செய்த புலாவ். இந்த புலாவ் ருசியானது மட்டும் கிடையாது ரொம்ப ஆரோக்கியமானது கூட. இந்த சுவையான காலா சன்னா புலாவ் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். எப்போதும்  பண்ற புலாவை விட இந்த புலால எக்ஸ்ட்ராவா ஒரே ஒரு மசாலாவை சேர்த்து பண்ண போறோம். அதுவும் நம்ம எப்போதுமே யூஸ் பண்ற அதே பொருளை வைத்து தான். வேறு எந்த ஒரு பொருளும் புதுசா சேர்க்க போறது கிடையாது .
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: biryani, LUNCH, pulao
Cuisine: maharastra
Keyword: Biriyani, Channa Mint Rice, channa pulao
Yield: 4 people
Calories: 400kcal
Cost: 150

Equipment

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 கப் கொண்டைக்கடலை
  • 3 உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • 1 கைப்பிடி புதினா , கொத்தமல்லி
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், ஒரு வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு, வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். பின்பு அதில் அறிந்து வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும்.

  • பிறகு இதில் தயிர், புதினா, கொத்தமல்லி தழைகள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்று அளவிற்கு நீர் விட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.
  • தண்ணீர் கொதித்து வந்த பிறகு அதில் ஊற வைத்து எடுத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு 3 விசில் விட்டு எடுத்தால் சுவையான மகாராஷ்டிரா ஸ்டைல் காலா சென்னா பிரியாணி தயார்.

Nutrition

Calories: 400kcal | Carbohydrates: 70g | Protein: 19g | Fat: 0.5g | Saturated Fat: 15g | Calcium: 103mg