Advertisement
சைவம்

காலை டிபனுக்கு சூப்பரான சுவையில் வாழைப்பழ இடியாப்பம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

வேகவைத்த உணவுகள் அப்படின்னாலே அந்த உணவுகள் ரொம்பவே  சத்தான உணவு. இவை ஆரோக்கியமான உணவுகள் அப்படிங்கிற பட்டியல்ல வந்துரும். அப்படி வேக வைத்த உணவுகள்ல உலகத்திலேயே முதல் இடம் பிடித்தது இட்லி. அதுக்கு அப்புறமா இடியாப்பம் ஆவியில் வேக வைப்பதால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவா இருக்கு.

இடியாப்பம் அப்படிங்கிற உணவு  உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு அதிகமாக பரிந்துரை செய்யபடுகிற உணவு. எல்லாரும் இந்த இடியாப்பம் தேங்காய் பால் காம்பினேஷனுக்கு விருப்பம் உள்ளவர்களாக தான் இருப்பாங்க. இடியாப்பத்தில் உடலுக்கு எந்த ஒரு தீங்கு விளைவிக்க கூடிய பொருளும் கிடையாது. அது முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஒரு உணவு.

Advertisement

இந்த இடியாப்பத்தில் லெமன் இடியாப்பம் செய்திருப்போம் . இடியாப்பம் தாளிச்சு சாப்பிட்டிருப்போம்.  சக்கரை போட்டு சாப்பிட்டு இருப்போம். இந்த மாதிரி எல்லா இடியாப்பமும் வெறும் அரிசி மாவுல மட்டுமே பண்ணி சாப்பிட்டு  இருப்போம். ஆனால் நம்ம இப்ப பண்ணப்போற இடியாப்பம் வாழைப்பழ இடியாப்பம். வாழைப்பழம்னா நேந்திரம் பழத்துல இந்த இடியாப்பத்தை செய்து சாப்பிடு போறோம்.

இந்த வாழைப்பழ இடியாப்பம் ரொம்பவே சுவையாகவும் எல்லாருக்கும் பிடித்த மனதாகவும் இருக்கும். வாழைப்பழம் அப்படிங்கறது ரொம்பவே புடிச்ச ஒரு பழம். வாழைப்பழத்தையும் இடியாப்பத்தையும் எப்படி மிக்ஸ் பண்ணி வாழைப்பழ இடியாப்பம் செய்யலாம் எப்படின்னு இப்போ தெரிஞ்சுக்க போறோம். இந்த வாழைப்பழ இடியாப்பத்தை ரொம்பவே சுலபமாக சீக்கிரமாகவும் செய்யலாம். சரி வாங்க இந்த வாழைப்பழ இடியாப்பம் எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

வாழைப்பழ இடியாப்பம் | Banana Idiyappam Recipe In Tamil

Print Recipe
வாழைப்பழ இடியாப்பம் ஆரோக்கியமான உணவுகள் அப்படிங்கிற பட்டியல்ல வந்துரும். அப்படி வேக வைத்த உணவுகள்ல உலகத்திலேயே முதல்
Advertisement
இடம் பிடித்தது இட்லி. அதுக்கு அப்புறமா இடியாப்பம் ஆவியில் வேக வைப்பதால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவா இருக்கு. இந்த வாழைப்பழ இடியாப்பம் ரொம்பவே சுவையாகவும் எல்லாருக்கும் பிடித்த மனதாகவும் இருக்கும். வாழைப்பழம் அப்படிங்கறது ரொம்பவே புடிச்ச ஒரு பழம். வாழைப்பழத்தையும் இடியாப்பத்தையும் எப்படி மிக்ஸ் பண்ணி வாழைப்பழ இடியாப்பம் செய்யலாம் எப்படின்னு இப்போ தெரிஞ்சுக்க போறோம். இந்த வாழைப்பழ இடியாப்பத்தை ரொம்பவே சுலபமாக சீக்கிரமாகவும் செய்யலாம்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Banana Idiyappam
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 649

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

  • 5 நேந்திரம் வாழைப்பழம்
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கப் நாட்டுசக்கரை

Instructions

  • முதலில் நேந்திரம் வாழைப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பழம் வெந்த பிறகு தோலை உரித்து விட்டு வெறும் பழத்தை மட்டும் மசித்து எடுத்துக் கொள்ளவும். மசித்து எடுத்து வைத்துள்ள வாழைப்பழத்தில் அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • இடியாப்ப மாவு பதத்திற்கு வருவதற்காக சிறிதளவு தண்ணீர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  
    மாவை பிசைந்த பிறகு இட்லி பாத்திரத்தில் வேக வைப்பதற்கு தயார் செய்து வைத்து விட்டு இடியாப்ப உரலில் பிசைந்து வைத்துள்ள மாவை சேர்த்து இடியாப்பங்களாக பிழியவும்.
  •  அது இடியாப்பத்தின் மேல் துருவிய தேங்காய் பூவை தூவி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். வாழைப்பழ இடியாப்பங்கள் வெந்த பிறகு அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  • மாற்றிய இடியாப்பத்திற்கு நாட்டுச்சர்க்கரையை சைடிஸ்சாக வைத்து பரிமாறினால் சுவையான வாழைப்பழ இடியாப்பம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 649kcal | Carbohydrates: 31g | Sodium: 354mg | Potassium: 243mg | Sugar: 6.9g | Calcium: 64mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

7 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

8 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

9 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

10 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

14 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

14 மணி நேரங்கள் ago