Advertisement
சைவம்

வாழை இலை ரவா தோசை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் வழக்கமாக தோசை சுடுவது போல் என்று தோசை சுட போவதில்லை முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட சுவையில் செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று வாழைஇலை வாசனை உடன் ரவா தோசை செய்து பார்க்க போகிறோம் இந்த வாழைஇலை ரவா தோசையில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் வாழை இலையை வைத்து செய்வதால் வாழை இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : இட்லிக்கு தோசைக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி ?

Advertisement

தோசைக்கல்லின் மீது வாழை இலையை வைத்து அதன் மேல் நம் தோசை மாவு ஊற்றி அதற்கு மேல் மறுபடியும் வாழை இலையை வைத்து மூடி தான் இன்று நான் தோசை சுட போகிறோம் இவ்வாறு சுடும் பொழுது தான் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதனால் இன்று இந்த வாழை இலை ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வாழை இலை ரவா தோசை | Banana Leaf Rava Dosai Recipe in Tamil

Print Recipe
இன்று வாழைஇலை வாசனை உடன் ரவா தோசை செய்து பார்க்க போகிறோம் இந்த வாழைஇலை ரவா தோசையில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் வாழை இலையை வைத்து செய்வதால் வாழை இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கும். தோசைக்கல்லின் மீது வாழை இலையை வைத்து அதன் மேல் நம் தோசை மாவு ஊற்றி அதற்கு மேல் மறுபடியும் வாழை இலையை வைத்து மூடி தான் இன்று நான் தோசை சுட போகிறோம் இவ்வாறு சுடும் பொழுது தான் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Rava dosai, ரவா தோசை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 138

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 1 வாழை இலை

Ingredients

  • 1 கப் ரவா
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் தயிர்
  • ½ கப் கேரட் பொடியா நறுக்கியது
  • ½ கப் பீன்ஸ் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ tbsp துருவிய இஞ்சி
  • 2 tbsp நெய்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் மாவுடன் சேர்த்து கலப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு ரவை மற்றும் ஒரு கப் அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் இதனுடன் அரை கப் கேரட், அரை கப் பீன்ஸ், அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி, அரை
    Advertisement
    டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் மாவை கலந்துவிட்டு பின் ஒரு கப் அளவிற்கு அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு. இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் தயார் செய்த மாவை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைத்து விடுங்கள். பின்பு வாழை இலைகளை சதுரமாக வெட்டி இரண்டு இலையை எடுத்து அதன் மேல் நன்றாக நெய் தடவிக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் ஒரு வாழை இலையை தோசை கல்லில் வைத்து அதன் மேல் மாவை ஊற்றி அதற்கு மேல் இன்னொரு இலையை வைத்து மூடி விடுங்கள்.
  • பின்பு அடிப்பகுதியில் தோசை வெந்து வந்ததும் இலையுடன் திருப்பி விடுங்கள் அவ்வளவுதான் இரு பக்கமும் வெந்தவுடன் தோசையை எடுத்துவிட்டு. இதேபோல் மீண்டும் இலையை வைத்து தோசை சுடுங்கள் அவ்வளவுதான் சுவையான வாழை இலை ரவா தோசை இனிதே தயார்

Nutrition

Serving: 80gram | Calories: 138kcal | Carbohydrates: 62g | Protein: 19g | Fat: 3g | Saturated Fat: 1.09g | Cholesterol: 11mg | Sodium: 14.8mg | Potassium: 264mg | Fiber: 6g | Sugar: 4.2g | Iron: 28mg

English Overview: rava dosai is one of the most important dosai in south india. rava dosai or rava dosai seivathu eppadi or rava dosai in Tamil are a few important terms to describe this recipe in the tamil

Advertisement
Prem Kumar

Recent Posts

மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

1 மணி நேரம் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

2 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

3 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

7 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

7 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

7 மணி நேரங்கள் ago