- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் வழக்கமாக தோசை சுடுவது போல் என்று தோசை சுட போவதில்லை முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட சுவையில் செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று வாழைஇலை வாசனை உடன் ரவா தோசை செய்து பார்க்க போகிறோம் இந்த வாழைஇலை ரவா தோசையில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் வாழை இலையை வைத்து செய்வதால் வாழை இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கும்.
இதையும் படியுங்கள் : இட்லிக்கு தோசைக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி ?
தோசைக்கல்லின் மீது வாழை இலையை வைத்து அதன் மேல் நம் தோசை மாவு ஊற்றி அதற்கு மேல் மறுபடியும் வாழை இலையை வைத்து மூடி தான் இன்று நான் தோசை சுட போகிறோம் இவ்வாறு சுடும் பொழுது தான் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அதனால் இன்று இந்த வாழை இலை ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: rava dosai is one of the most important dosai in south india. rava dosai or rava dosai seivathu eppadi or rava dosai in Tamil are a few important terms to describe this recipe in the tamil
Ingredients
Method
முதலில் மாவுடன் சேர்த்து கலப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு ரவை மற்றும் ஒரு கப் அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இதனுடன் அரை கப் கேரட், அரை கப் பீன்ஸ், அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி, அரை டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின் மாவை கலந்துவிட்டு பின் ஒரு கப் அளவிற்கு அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு. இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்பு நாம் தயார் செய்த மாவை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைத்து விடுங்கள். பின்பு வாழை இலைகளை சதுரமாக வெட்டி இரண்டு இலையை எடுத்து அதன் மேல் நன்றாக நெய் தடவிக் கொள்ளுங்கள்.
அதன் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் ஒரு வாழை இலையை தோசை கல்லில் வைத்து அதன் மேல் மாவை ஊற்றி அதற்கு மேல் இன்னொரு இலையை வைத்து மூடி விடுங்கள்.
பின்பு அடிப்பகுதியில் தோசை வெந்து வந்ததும் இலையுடன் திருப்பி விடுங்கள் அவ்வளவுதான் இரு பக்கமும் வெந்தவுடன் தோசையை எடுத்துவிட்டு. இதேபோல் மீண்டும் இலையை வைத்து தோசை சுடுங்கள் அவ்வளவுதான் சுவையான வாழை இலை ரவா தோசை இனிதே தயார்






