Advertisement
சைவம்

வாழைத்தண்டு பொரியல் இனி இப்படி செய்யுங்கள் இதன் சுவை அலாதியாக இருக்கும்!

Advertisement

ஒரு மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுவது வாழை மரத்தில் மட்டுமே.இந்த வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் நமக்கு உணவாகவோ உணவு உண்பதற்காகவும் ஏதோ ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த வாழை மரங்கள் தார் விடுவிட்டால் அதன் அடியிலிருந்து இரண்டு மூன்று வாழை கன்றுகள் முளைத்து வரும் அப்படிப்பட்ட வாழைமரம் இன்றியமையாத பல நன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாழை இலையில் உணவு உண்ணலாம் .

வாழைமரத்தின் பட்டையில் நார் எடுத்து பூ கட்டுவது. வாழைத்தண்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வாழைப்பூ உணவாக எடுத்து கொள்கிறோம். வாழைக்காய் வாழைப்பழம் உணவாக சேர்த்துக் கொள்கிறோம். வாழைக்கிழங்கு கூட உணவாக சாப்பிடுகிறோம். வாழைக்கிழங்கில் வரக்கூடிய தண்ணீர் சிறுநீரக கல்லையுப் உடல் சூட்டையும் தணிப்பதற்கு மிகவும் இன்றி அமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை வைத்து சுவையான பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். இந்த வாழைத்தண்டு பொரியல் உடலுக்கு நம்மை கொடுக்கின்றது..

Advertisement

 இந்த வாழைத்தண்டு சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்துகிறது. வாழைதண்டில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நமக்கு செரிமான பிரச்சனையை தீர்த்து மலச்சிக்கலை குறைக்கின்றது. இந்த வாழைத்தண்டை சூப், பொரியல், கூட்டு போன்றவை வைத்து சாப்பிடும் போது  சத்துக்கள் கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு பொரியலை மிக எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

வாழைத்தண்டு பொரியல் | Banana stem Stir Fry In Tamil

Print Recipe
வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை வைத்து சுவையான பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். இந்த வாழைத்தண்டு பொரியல் உடலுக்கு நம்மை கொடுக்கின்றது.. இந்த வாழைத்தண்டு சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்துகிறது. வாழைதண்டில் உள்ள அதிகப்படியான
Advertisement
நார்ச்சத்துக்கள் நமக்கு செரிமான பிரச்சனையை தீர்த்து மலச்சிக்கலை குறைக்கின்றது. இந்த வாழைத்தண்டை சூப், பொரியல், கூட்டு போன்றவை வைத்து சாப்பிடும் போது  சத்துக்கள்கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு பொரியலை மிக எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
Course LUNCH, Side Dish
Cuisine tamil nadu
Keyword Banana stem Stir Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings
Advertisement
4
Calories 55

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் வாழைத்தண்டு
  • 1 வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு  தேவையானஅளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து அதில் உள்ள நாரை பிரித்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீர் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
  • காரணம் வாழைத்தண்டில் இருக்கின்ற இரும்பு சத்து சீக்கிரமாக வாழைத்தண்டை கருத்து போக செய்து விடும் ஆகையால் அதை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். சிலர் மோரில் போட்டு வைப்பார்கள்.
  • பிறகு அடுப்பில் ஒரு வானொலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் போட்டு பொறிந்ததும் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  ஊறவைத்த கடலை பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
  • பின் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு பொடியாக அறிந்து வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கலந்து விட்ட வாழைத்தண்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • வாழைத்தண்டு நன்றாக வெந்த பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் ருசியான சத்தான வாழைத்தண்டு பொரியல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

5 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

5 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

6 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

7 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

8 மணி நேரங்கள் ago