தாவரத்தில் இருக்கும் இலைகள், காய்கள், பழங்கள்,கிழங்குகள்.அப்படி நிறைய சமையல்ல சேர்த்து சமைத்து இருப்போம். அதே மாதிரி ஒரு சில தாவரங்ளோடு மலர்களையும் உணவுகள் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி அதிக அளவுல ஒரு காய்கறியோட மலர சேர்த்து சாப்பிடுவது அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுல முதல்ல முக்கியமான இடம் கிடைக்கிறது வாழைமொட்டுக்கு தான். இந்த வாழைமொட்டுகளை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகள் நிறைய சமைத்து சாப்பிடலாம்.
அப்படி வாழைப்பூ வடை எல்லாருக்குமே ரொம்ப விருப்பம ஒரு உணவாக இருக்கு. வாழை மொட்டு எல்லாருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதே மாதிரி இந்த வாழைமொட்டை பயன்படுத்தி முருங்கைகீரை கூட சேர்த்து ஒரு கூட்டு செய்து சாப்பிட போறோம். கிராமப்புறங்களில் வாழைமொட்டு சமைக்கிறாங்க அப்படின்னா அது கூட கண்டிப்பா முருங்கைக்கீரை சேர்த்து தான் சமைப்பாங்க.
இந்த வாழைமொட்டு மற்றும் முருங்கை கீரை ரெண்டுலையுமே அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்ஸ் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கு. ஆகையினால இந்த வாழைப்பூ முருங்கைக் கீரைகளை நீங்க உணவுல சேர்த்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கிறது. உடலுக்கு சக்தி அதிகரிக்கும் எலும்புகள் வலிமையாகும். முடி வளர்ச்சியை தூண்டிவிடும் . மலச்சிக்கல் குறையும். இது மாதிரி நிறைய விஷயங்களுக்கு இந்த வாழைமொட்டும் முருங்கைக்கீரையும் உபயோகமாக இருக்கிறது.
இவ்வளவு சத்துக்கள் இருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு வாழைமூட்டு ஒரு உதாரணம் அப்படின்னே சொல்லலாம். இந்த சத்தம் மிக்க முருங்கைக்கீரை வாழைப்பூ கூட்டு எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
வாழைமொட்டு முருங்கைகீரை கூட்டு | Bananaflower Drumstick Leaves Kootu
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 வாழைமொட்டு
- 1 கப் முருங்கை கீரை
- 1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
- 12 கப் கடலை பருப்பு
- 2 வெங்காயம்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடுகு
- 2 காய்ந்த மிளகாய்
செய்முறை
- முதலில் வாழைமொட்டை நரம்பு நீக்கிசுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாழை மொட்டை சுத்தம் செய்யும் பொழுது கையில் என்னை தடவிக் கொண்டால் கையின் நிறம் கருத்து போகாது.
- பின் சுத்தம் செய்த வாழை மொட்டுக்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய வாழைமொட்டை சிறிது மோர் கலந்த நீரில் வைக்கவும்.
- முருங்கை கீரையை உருவி சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கடலைபருப்பை ஒரு 15நிமிடம் ஊற வைத்து பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
- கடலை பருப்பு வெந்த பிறகு அதில் மிளகாய் தூள் , உப்பு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைமொட்டு மற்றும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வேக விடவும்.
- முருங்கை கீரை மற்றும் வாழைமோட்டு நன்றாக வெந்த பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்த பிறகு அதில் கடுகு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் இந்த தாளிப்புகளை எடுத்து வெந்து கொண்டிருக்கும் வாழைப்பூ முருங்கை கீரையில் சேர்த்து கிளறவும்.
- தேங்காய் துருவலோடு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அரைத்த இந்த தேங்காய் விழுதை தாளித்த பிறகு குழம்பில் கலந்து நன்றாக கொதி வந்த பிறகு இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் சுவையான சுலபமான வாழைமொட்டு முருங்கைக் கீரை கூட்டு தயார்