Advertisement
சைவம்

பாவக்காய் புளிக்குழம்பு இனி இப்படி செய்தால், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க!

Advertisement

பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் படிக்கணும்.

அந்த கசப்பு உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரம் ஒரு முறையாவது கசப்பு சுவையுடைய உணவை நமது உணவில் சேர்த்து கொள்வது நமக்கு ரொம்ப நல்லது. கசப்பு சுவை அப்படிங்கறது உடம்புல இருக்குற ரத்தத்தை சுத்திகரிக்கிறதுக்கும் ரொம்ப உதவும் . மலச்சிக்கல், சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் இருக்கும் பூச்சிகள் மாதிரி நிறைய நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த கசப்பு தன்மை கொண்ட உணவு பொருட்கள் முக்கியமான காரணமா இருக்கு. அதுலயும் பாகற்காய்க்கு முதலிடம். பாகற்காய் பாக்கும்போது எல்லாருக்கும் ஆசையா இருக்கும்.

Advertisement

ஆனால் அதை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சோம்னா அதோட கசப்பு கண்ணு முன்னாடி வந்து சாப்பிட விடாமல் பண்ணிடும். அதனால பாகற்காயை கசப்பு தெரியாத அளவுக்கு எப்படி சுவையா செஞ்சு சாப்பிடணும் அப்படிங்கிறதுல தான் விசயமே இருக்கு. நம்ம பாகற்காயில் வறுவல் , சாம்பார் , கூட்டு, தொக்கு, ஊறுகாய் என்று விதவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் பாகற்காய புளிக்குழம்புல போட்டு சாப்பிடுற சுவையே தனி சுவைதான். அப்படிப்பட்ட பாகற்காய் புளிக்குழம்பு ரொம்ப சுவையாவும் அற்புதமாவும் செஞ்சு ரெண்டு நாள் வரைக்கும் கெட்டு போகாம வச்சிருந்து சாப்பிடலாம் அத  எப்படி செய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.

பாகற்காய் புளி குழம்பு | Bitter Gourd Puli Kulambu In Tamil

Print Recipe
பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள்
Advertisement
இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் படிக்கணும். அப்படிப்பட்ட பாகற்காய் புளிக்குழம்பு ரொம்ப சுவையாவும் அற்புதமாவும் செஞ்சு ரெண்டு நாள் வரைக்கும் கெட்டு போகாம வச்சிருந்து சாப்பிடலாம் அத  எப்படிசெய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.
 
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Bitter Gourd Puli Kulambu
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 1 hour 10 minutes
Servings 4
Calories 72

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 பாகற்காய்
  • புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • வெல்லம் சின்ன கட்டி

அரைக்க

  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா தேவைப்பட்டால்

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கறிவேப்பிலை கறிவேப்பிலை

Instructions

  • அடுப்பில் கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு ட்டமாக மீடியம் சைஸில் அறிந்த பாகற்காய் துண்டுகளை வதக்க வேண்டும்.பாகறகாய் துண்டுகள் பத்து நிமிடம் வதங்கிய பிறகு தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
  •  மீதமுள்ள எண்ணெயில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு ,வெந்தயம் ,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பிறகு அதில் பூண்டு ,வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கி வந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி வதக்கி வைத்த பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
  • பிறகு கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றி நன்றாக கிளறி சிறிது உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும். புளியின் பச்சை வாசனை மாறியவுடன் அதில் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் .
  • பிறகு சிறிய வெல்ல கட்டியை சேர்த்து ஐந்து நிமிடம் கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.
  • சுவையான பாகற்காய் குழம்பு தயார் இந்து குழம்பை இரண்டு நாட்கள் வரை கெடாமல் வைத்து உண்ணலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 72kcal | Protein: 14g | Sodium: 2mg | Potassium: 107mg | Fiber: 1g | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

4 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

4 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

4 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

6 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

7 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

7 மணி நேரங்கள் ago