பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் படிக்கணும்.
அந்த கசப்பு உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரம் ஒரு முறையாவது கசப்பு சுவையுடைய உணவை நமது உணவில் சேர்த்து கொள்வது நமக்கு ரொம்ப நல்லது. கசப்பு சுவை அப்படிங்கறது உடம்புல இருக்குற ரத்தத்தை சுத்திகரிக்கிறதுக்கும் ரொம்ப உதவும் . மலச்சிக்கல், சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் இருக்கும் பூச்சிகள் மாதிரி நிறைய நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த கசப்பு தன்மை கொண்ட உணவு பொருட்கள் முக்கியமான காரணமா இருக்கு. அதுலயும் பாகற்காய்க்கு முதலிடம். பாகற்காய் பாக்கும்போது எல்லாருக்கும் ஆசையா இருக்கும்.
ஆனால் அதை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சோம்னா அதோட கசப்பு கண்ணு முன்னாடி வந்து சாப்பிட விடாமல் பண்ணிடும். அதனால பாகற்காயை கசப்பு தெரியாத அளவுக்கு எப்படி சுவையா செஞ்சு சாப்பிடணும் அப்படிங்கிறதுல தான் விசயமே இருக்கு. நம்ம பாகற்காயில் வறுவல் , சாம்பார் , கூட்டு, தொக்கு, ஊறுகாய் என்று விதவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் பாகற்காய புளிக்குழம்புல போட்டு சாப்பிடுற சுவையே தனி சுவைதான். அப்படிப்பட்ட பாகற்காய் புளிக்குழம்பு ரொம்ப சுவையாவும் அற்புதமாவும் செஞ்சு ரெண்டு நாள் வரைக்கும் கெட்டு போகாம வச்சிருந்து சாப்பிடலாம் அத எப்படி செய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகற்காய் புளி குழம்பு | Bitter Gourd Puli Kulambu In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பாகற்காய்
- புளி பெரிய நெல்லிக்காய் அளவு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
- வெல்லம் சின்ன கட்டி
அரைக்க
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் கசகசா தேவைப்பட்டால்
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1 கறிவேப்பிலை கறிவேப்பிலை
செய்முறை
- அடுப்பில் கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு ட்டமாக மீடியம் சைஸில் அறிந்த பாகற்காய் துண்டுகளை வதக்க வேண்டும்.பாகறகாய் துண்டுகள் பத்து நிமிடம் வதங்கிய பிறகு தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
- மீதமுள்ள எண்ணெயில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு ,வெந்தயம் ,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பிறகு அதில் பூண்டு ,வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கி வந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி வதக்கி வைத்த பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
- பிறகு கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றி நன்றாக கிளறி சிறிது உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும். புளியின் பச்சை வாசனை மாறியவுடன் அதில் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் .
- பிறகு சிறிய வெல்ல கட்டியை சேர்த்து ஐந்து நிமிடம் கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.
- சுவையான பாகற்காய் குழம்பு தயார் இந்து குழம்பை இரண்டு நாட்கள் வரை கெடாமல் வைத்து உண்ணலாம்.