Advertisement
சைவம்

உங்க வீட்டில் செய்யும் பீன்ஸ் பொரியலும் இனி ருசியாக இருக்கும்! பீன்ஸ் எள் பொரியல் காரசாரமாக இப்படி செய்து அசத்துங்க!

Advertisement

பொதுவாகவே நம்முடைய வீடுகளில் காய் சேர்த்து எந்த பொரியல் செய்தாலும் அதை குழந்தைகள் பெரியவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நீங்கள் சமைக்கக்கூடிய பீன்ஸ் பொறியலில் கூடுதல் மணமும் சுவையைப் பெற எள்  சேர்த்து  மணக்க மணக்க  பீன்ஸ் எள் பொரியல் செய்து பாருங்கள்.

 உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட் பீன்ஸ் பொரியல், கத்தரிக்காய் பொரியல் என்று இதை எந்த பொரியலுக்கு வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். சில காய்களை அப்படியே எண்ணெயில் போட்டு வறுப்போம் அல்லவா. அந்த வறுவலுக்கும் இந்த எள் சேர்த்துக் கொண்டால் சுவையாக தான் இருக்கும்.

Advertisement

நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ் காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த எள் சேர்த்து  பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால் வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும். வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் பீன்ஸ் எள் பொரியல் செய்வது எப்படி என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

பீன்ஸ் எள் பொரியல் | Beans Sesame Stir Fry Recipe In Tamil

Print Recipe
நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ்
Advertisement
காயை வாரத்தில்ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த எள் சேர்த்து  பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால்வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும்.வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் பீன்ஸ் எள் பொரியல் செய்வது எப்படி என்று நாமும்தெரிந்து கொள்வோம்.
Advertisement
 
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Beans Sesame Stir Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 131

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் பீன்ஸ்
  • 3 டேபிள் ஸ்பூன் எள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 4 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • கடாயில் எண்ணெய் இல்லாமல் எள்ளை போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் பொடி செய்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு. சீரகம், கறிவேப்பிலை பச்சைமிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு பீன்ஸைச் சேர்த்து சிறிது நீரைத் தௌறத்து மூடி வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து வேக விடவும், காய் வெந்ததும் அதில் உப்பு, பொடியாக்கிய எள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் வைத்து இறக்கவும்.
  • சுவையான பீன்ஸ் எள் பொரியல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Fiber: 405g | Calcium: 35mg | Iron: 2.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago