உங்க வீட்டில் செய்யும் பீன்ஸ் பொரியலும் இனி ருசியாக இருக்கும்! பீன்ஸ் எள் பொரியல் காரசாரமாக இப்படி செய்து அசத்துங்க!

- Advertisement -

பொதுவாகவே நம்முடைய வீடுகளில் காய் சேர்த்து எந்த பொரியல் செய்தாலும் அதை குழந்தைகள் பெரியவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நீங்கள் சமைக்கக்கூடிய பீன்ஸ் பொறியலில் கூடுதல் மணமும் சுவையைப் பெற எள்  சேர்த்து  மணக்க மணக்க  பீன்ஸ் எள் பொரியல் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

 உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட் பீன்ஸ் பொரியல், கத்தரிக்காய் பொரியல் என்று இதை எந்த பொரியலுக்கு வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். சில காய்களை அப்படியே எண்ணெயில் போட்டு வறுப்போம் அல்லவா. அந்த வறுவலுக்கும் இந்த எள் சேர்த்துக் கொண்டால் சுவையாக தான் இருக்கும்.

- Advertisement -

நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ் காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த எள் சேர்த்து  பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால் வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும். வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் பீன்ஸ் எள் பொரியல் செய்வது எப்படி என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Print
2.63 from 8 votes

பீன்ஸ் எள் பொரியல் | Beans Sesame Stir Fry Recipe In Tamil

நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ் காயை வாரத்தில்ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த எள் சேர்த்து  பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால்வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும்.வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் பீன்ஸ் எள் பொரியல் செய்வது எப்படி என்று நாமும்தெரிந்து கொள்வோம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Beans Sesame Stir Fry
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பீன்ஸ்
  • 3 டேபிள் ஸ்பூன் எள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 4 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • கடாயில் எண்ணெய் இல்லாமல் எள்ளை போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் பொடி செய்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு. சீரகம், கறிவேப்பிலை பச்சைமிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு பீன்ஸைச் சேர்த்து சிறிது நீரைத் தௌறத்து மூடி வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து வேக விடவும், காய் வெந்ததும் அதில் உப்பு, பொடியாக்கிய எள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் வைத்து இறக்கவும்.
  • சுவையான பீன்ஸ் எள் பொரியல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Fiber: 405g | Calcium: 35mg | Iron: 2.2mg