Advertisement
காலை உணவு

காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!

Advertisement

தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள பீட்ரூட் இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு.

இது எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை’ என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 10 நிமிடத்தில் பீட்ரூட் இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Advertisement

பீட்ரூட் இடியாப்பம் | Beetroot Idiyappam Recipe In Tamil

Print Recipe
தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில்
Advertisement
சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள பீட்ரூட் இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை!
Course Breakfast
Cuisine Indian
Keyword Beetroot Idiyappam
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 58

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 இடியாம்பம் பிழியும் இயந்திரம்

Ingredients

  • 2 கப் அரிசி மாவு
  • 2 பீட்ரூட்
  • 1/2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • சூடான தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை வடிகட்டி அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் தேவையான அளவு அரிசி மாவு எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பின் பீட்ரூட் சாறு சேர்த்து அனைத்து மாவையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பின் இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் மாவை நிரப்பி இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் மாவை பிழிந்து கொள்ளவும்.
  • இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி வேகவிடவும். ஏழு நிமிடங்கள் கழித்து நன்றாக ஆவி வரும் பொழுது எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் இடியாப்பம் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 1.3g | Protein: 4.7g | Fat: 0.2g | Sodium: 78mg | Potassium: 5mg | Fiber: 32g | Vitamin A: 4IU | Calcium: 16mg | Iron: 2.8mg

இதனையும் படியுங்கள் : இடியாப்பம் ப்ரை, காலை மதியம் இரவு என எந்த வேலைகளில் வேணாலும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

16 நிமிடங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

4 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

13 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

14 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

14 மணி நேரங்கள் ago