இடியாப்பம் ப்ரை, காலை மதியம் இரவு என எந்த வேலைகளில் வேணாலும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்!!!

- Advertisement -

ஆவியில் வேக வைத்து உண்ணும் உணவான இடியாப்பம் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆவியில் வேக வைத்து நாம் உண்ணும் உணவான இட்லி இடியாப்பம் புட்டு என அனைத்துமே ஆரோக்கியமானது தான்.ஆனால் இடியாப்பம் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது காரணம் நமது இனிப்பாகவும் சைடு டிஷ் வைத்து உண்ணலாம் காரமாகவும் சைட் டிஷ் வைத்து உண்ணலாம்.

-விளம்பரம்-

ஒரு சிலருக்கு வியாபத்திற்கு தேங்காய் பால் மிகவும் பிடிக்கும் ஒரு சிலருக்கு ஆட்டுக்கால் பாயா, வெஜிடபிள் குருமா என காரமான சைடிஷ் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஒரு சிலர் லெமன் இடியாப்பம் தக்காளி இடியாப்பம் என செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் காய்கறிகள் எல்லாம் வைத்து ஒரு இடியாப்பம் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருவேளை காலையில் செய்த இடியாப்பம் மீதமாகிவிட்டால் இரவில் இந்த இடியாப்பம் ஃப்ரை செய்து கொடுத்தால் இடியாப்பம் வீணாகவும் ஆகாது அதே நேரத்தில் ஹெல்தியான ஒரு டின்னர் ஆகவும் நமக்கு அமையும். இந்த இடியாப்பம் சரி செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே இருந்தால் போதும். காய்கறிகள் வெட்டுவதற்கு மட்டுமே நமக்கு நேரம் தேவைப்படும். இந்த சுவையான இடியாப்பம் ஃப்ரை நாம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கூட கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு சுவையான வயிறும் நிரம்பக் கூடிய ஒரு உணவாக இது அமையும். இப்ப வாங்க இந்த சுவையான இடியாப்பம் சரி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

இடியாப்பம் ப்ரை | Idiyappam Fry Recipe In Tamil

காலையில் செய்த இடியாப்பம் மீதமாகிவிட்டால் இரவில் இந்த இடியாப்பம் ஃப்ரை செய்து கொடுத்தால்இடியாப்பம் வீணாகவும் ஆகாது அதே நேரத்தில் ஹெல்தியான ஒரு டின்னர் ஆகவும் நமக்கு அமையும்.இந்த இடியாப்பம் சரி செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே இருந்தால் போதும். காய்கறிகள்வெட்டுவதற்கு மட்டுமே நமக்கு நேரம் தேவைப்படும். இந்த சுவையான இடியாப்பம் ஃப்ரை நாம்குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கூட கொடுத்து விடலாம். அந்த அளவிற்கு சுவையான வயிறும்நிரம்பக் கூடிய ஒரு உணவாக இது அமையும். இப்ப வாங்க இந்த சுவையான இடியாப்பம் சரி எப்படிசெய்யறதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Idiyappam Fry
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 இடியாப்பம்
  • 2 கப் பால்
  • 2 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 முட்டை
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • 1/2 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்

செய்முறை

  • முதலில் இடியாப்பத்தில் பால் சேர்த்து உதிரி ஆக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கேரட் உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் வெங்காயம், தக்காளி அனைத்தையும் உங்களுக்கு தேவையான வடிவத்தில்நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
  • அதன் பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் அதில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகவதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் அரை மதத்திற்கு வந்தவுடன் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும்.
  • பிறகு உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  • இறுதியாக மல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான இடியாப்பம் ஃப்ரை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 5.8g | Cholesterol: 8mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ருசியான கோதுமை இடியாப்பம் இப்படி சுலபமாக செஞ்சு பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!