இரவு டிபனுக்கு ருசியான கோதுமை இடியாப்பம் இப்படி சுலபமாக செஞ்சு பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

இடியாப்பம் அனைவருக்குமே பிடித்தமான ஒரு டிபன் என்று சொல்லலாம். இந்த இடியாப்பத்திற்கு நாம் காரமாகவும் சைட் டிஷ் வச்சு சாப்பிடலாம். இனிப்பாகவும் சைடு டிஷ் வைத்து சாப்பிடலாம். உதாரணமாக தேங்காய் பால், ஆட்டுக்கால் பாயா, குருமா என அனைத்துமே இடியாப்பத்திற்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

ஆவியில் வேகவைத்து உண்ணும் உணவுகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அந்த வகையில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. இடியாப்பத்தில் பல வகையான இடியாப்பங்கள் உண்டு. அரிசி மாவு இடியாப்பம், ராகி இடியாப்பம் என பலவகையான இடியாப்பங்களை  சாப்பிட்டு இருப்போம். அந்த இடியாப்பங்களில் லெமன் இடியாப்பம் தக்காளி இடியாப்பம் என பல வகைகளை செய்து நாம் சாப்பிடலாம் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

அரிசி மாவு மட்டும் வைத்து இடியாப்பம் செய்யாமல் சிறு தானியங்களை வைத்து நாம் செய்யும் இடியாப்பங்கள் இன்னும் ஆரோக்கியமானதாகவே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் கோதுமை இடியாப்பம் செய்யப் போகிறோம். கோதுமைகள் இடியாப்பம் மிகவும் சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். மிகவும் சாஃப்ட்டாக நம்மால் கோதுமை இடியாப்பம் செய்ய முடியும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி சாப்டா செய்வது என்று பார்க்கலாம்.

Print
2.67 from 3 votes

கோதுமை இடியாப்பம் | Wheat Idiyappam Recipe In Tamil

இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. இடியாப்பத்தில் பல வகையான இடியாப்பங்கள் உண்டு. அரிசிமாவு இடியாப்பம், ராகி இடியாப்பம் என பலவகையான இடியாப்பங்களை  சாப்பிட்டு இருப்போம். அந்த இடியாப்பங்களில் லெமன்இடியாப்பம் தக்காளி இடியாப்பம் என பல வகைகளை செய்து நாம் சாப்பிடலாம் சுவை மிகவும்அருமையாக இருக்கும். மிகவும் சாஃப்ட்டாக நம்மால் கோதுமை இடியாப்பம் செய்யமுடியும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி சாப்டா செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Wheat Idiyappam
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் ஒரு கடையில் கோதுமை மாவை போட்டு வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனை ஒரு இட்லி துணியில் போட்டு மூட்டை கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆவிகள் வேகவைத்த கோதுமை மாவை நன்றாக சலித்து கட்டிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் சலித்து வைத்துள்ள கோதுமை மாவு அரிசி மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெந்நீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவினை இடியாப்ப ஆற்றில் போட்டுஇட்லி பாத்திரத்தில் விழுந்து ஐந்திலிருந்து எட்டு நிமிடங்கள் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது நமக்கு சாப்டான சுவையான கோதுமை இடியாப்பம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g