சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்கா
பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம். பெண்களுக்கு பீட்ரூட் பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் உடலில் இரத்தம் அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் என்றாலே அது இனிப்பாக இருக்கும் என்பதால் பலருக்கு பிடிப்பது இல்லை. பொரியல் செய்து கொடுத்தால் போதும் அவர்களுக்கு சாப்பாடு தொண்டையில் எளிதில் இறங்காது. இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை ஒதுக்குபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இது சாப்பிடுவதற்கு சுவை குறைவாக இருந்தாலும் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளும், ஊட்டச்சத்துக்களும் இந்த காய்கறிகளில் தான் அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு இவற்றை உணவுடன் சேர்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது. குறைந்ததை பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். அவ்வாறு ஹீமோகுளோபின் பிரச்சனையை சரிசெய்யக்கூடிய பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் கூட்டு ஒருமுறை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள்! அற்புதமான சுவையில் இருக்கும்