Advertisement
சைவம்

ருசியான வெரைட்டி ரைஸ் சாப்பிட பீட்ரூட் பாலக் ரைஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

உடல் ஆரோக்கியம் என்பது தொடங்கும் இடமே நம் உணவு பழக்க வழக்கங்களில் தான். நாம் உண்ணும் உணவை சரியான அளவில் சரியான சத்தான பொருட்களாக உண்ணும் போது, பல நோய்கள் வருவதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். பீட்ரூட் பாலக்  இரண்டையும் சேர்த்து செய்யப்படும் இந்த சாதம், பார்ப்பதற்கு நல்ல நிறத்துடன், சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

பீட்ரூட்  உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.. பீட்ரூட் பாலக் ரைஸ் சுலபமாக செய்து முடித்து விடலாம். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. உணவு என்பது அந்த நேரத்திற்கு பசியாற்றிக் கொள்ள என்று இல்லாமல், ஆரோக்கியமான உணவு என்ற வகையில் தான் சாப்பிடவேண்டும். வாங்க இந்த பீட்ரூட் பாலக் சாதத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement
Advertisement

பீட்ரூட் பாலக் ரைஸ் | Beetroot Paalak Rice Recipe In Tamil

Print Recipe
பீட்ரூட்பாலக்  இரண்டையும் சேர்த்து செய்யப்படும் இந்தசாதம், பார்ப்பதற்கு நல்ல நிறத்துடன், சுவையாகவும் இருக்கும். பீட்ரூட்  உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும்ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து பாலக்கீரையில் இரும்புச்சத்து,பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. … பீட்ரூட்பாலக் ரைஸ் சுலபமாக செய்து முடித்து
Advertisement
விடலாம். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியைகட்டாயம் மிஸ் பண்ண கூடாது. உணவு என்பது அந்த நேரத்திற்கு பசியாற்றிக் கொள்ள என்றுஇல்லாமல், ஆரோக்கியமான உணவு என்ற வகையில் தான் சாப்பிடவேண்டும். வாங்க இந்த பீட்ரூட்பாலக் சாதத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Beetroot Paalak Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 58

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 பீட்ரூட்
  • 2 கைப்பிடி பாலக்
  • 1 ஆழாக்கு அரிசி
  • 1/4 டம்ளர் துவரம் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 1` தக்காளி
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • பூண்டு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி தனியா தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

தாளிக்க

  • கடுகு சிறிது
  • சீரகம் சிறிது
  • பெருங்காயத் தூள்
  • கறிவேப்பிலை

Instructions

  • பீட்ரூட்டை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, நறுக்கிகொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும்பருப்பை களைந்து வைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், நறுக்கிய வெங்காயம்போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்த்துஅதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
  • இதனுடன் பாலக்கீரையை சேர்த்து கிளறவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்புசேர்க்கவும்.
  • பின்னர் இதனை மூடி 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். விரும்பினால் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் பாலக் ரைஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 2.2g | Fat: 0.2g | Saturated Fat: 78g | Fiber: 2.808g | Calcium: 16mg | Iron: 0.8mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago