உடல் ஆரோக்கியம் என்பது தொடங்கும் இடமே நம் உணவு பழக்க வழக்கங்களில் தான். நாம் உண்ணும் உணவை சரியான அளவில் சரியான சத்தான பொருட்களாக உண்ணும் போது, பல நோய்கள் வருவதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். பீட்ரூட் பாலக் இரண்டையும் சேர்த்து செய்யப்படும் இந்த சாதம், பார்ப்பதற்கு நல்ல நிறத்துடன், சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
பீட்ரூட் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.. பீட்ரூட் பாலக் ரைஸ் சுலபமாக செய்து முடித்து விடலாம். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. உணவு என்பது அந்த நேரத்திற்கு பசியாற்றிக் கொள்ள என்று இல்லாமல், ஆரோக்கியமான உணவு என்ற வகையில் தான் சாப்பிடவேண்டும். வாங்க இந்த பீட்ரூட் பாலக் சாதத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பீட்ரூட் பாலக் ரைஸ் | Beetroot Paalak Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட்
- 2 கைப்பிடி பாலக்
- 1 ஆழாக்கு அரிசி
- 1/4 டம்ளர் துவரம் பருப்பு
- 1 வெங்காயம்
- 1` தக்காளி
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- பூண்டு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி தனியா தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
தாளிக்க
- கடுகு சிறிது
- சீரகம் சிறிது
- பெருங்காயத் தூள்
- கறிவேப்பிலை
செய்முறை
- பீட்ரூட்டை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, நறுக்கிகொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும்பருப்பை களைந்து வைக்கவும்.
- குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், நறுக்கிய வெங்காயம்போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்த்துஅதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
- இதனுடன் பாலக்கீரையை சேர்த்து கிளறவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்புசேர்க்கவும்.
- பின்னர் இதனை மூடி 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். விரும்பினால் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் பாலக் ரைஸ் தயார்.