வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்!!
நம்முடைய கர்ம வினைகள் பின் தொடர்வதால் நமக்கு பல்வேறு துன்பங்கள் எப்பொழுதுமே ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் நிறைய விஷயங்களை செய்வோம் விதியை மதியால் வெல்ல முடியும் என்பது போல சில விஷயங்களை செய்து கர்ம வினைகளை நாம் குறைத்துக் கொள்ளலாம். அந்த கர்ம வினைகளை
நம்முடைய கர்ம வினைகள் பின் தொடர்வதால் நமக்கு பல்வேறு துன்பங்கள் எப்பொழுதுமே ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் நிறைய விஷயங்களை செய்வோம் விதியை மதியால் வெல்ல முடியும் என்பது போல சில விஷயங்களை செய்து கர்ம வினைகளை நாம் குறைத்துக் கொள்ளலாம். அந்த கர்ம வினைகளை குறைப்பதற்கு அற்புதமான பலனை தரக்கூடியது தான் வெட்டிவேர் தீபம். வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால் இன்னும் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெட்டிவேர்
நல்ல ஆற்றல்களை வெளிவிடக்கூடிய ஒரு மூலிகை வேர் தான் வெட்டுவேர். இந்த வேரை கொண்டு பல ஆன்மீக பலன்களை பெறலாம் வெட்டிவேர் ஹோமம் செய்யும் போது பயன்படுத்தப்படும் மகாலட்சுமி தாயாருக்கு இணையான சக்தி கொண்டது தான் வெட்டிவேர். இது குளிர்ச்சியான தன்மையை கொண்டது இதன் மூலம் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
வெட்டிவேரில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமி
வெட்டிவேரில் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. மகாலட்சுமி தேவியாரின் ஆசிர்வாதம் வீட்டில் இருக்க வெட்டி வேர் எப்பொழுதும் வீட்டில் இருக்க வேண்டும். எனவே மருந்து கடைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கக்கூடிய இந்த வெட்டிவேரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெட்டிவேரை வாங்கி கண்ணாடி டம்ளரில் போட்டு வரவேற்பு அருகில் வைத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வெட்டிவேர் தீபம் பலன்கள்
வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால் வீட்டு செல்வ வளம் உயரும் சுப காரிய தடைகள் இருந்தாலும் விலகி, திருமணம் கைகூடி வரும். எனவே தொழில் வளர்ச்சி அடையவும் நீங்கள் இந்த வெட்டிவேரை கொண்டு பரிகாரம் செய்யலாம். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் வெட்டிவேரை கொண்டு பரிகாரம் செய்யலாம்.
வெட்டிவேர் மகாலட்சுமி தீபம்
வெட்டிவேரை வாங்கி ஒரு வெள்ளை நிற துணியில் மூட்டையாக கட்டி பிரிட்ஜ்க்குள் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை என்றும் மகாலட்சுமி தேவியாருக்கு பூஜை செய்யும் போது காமாட்சி அம்மன் விளக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெட்டிவேரை போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி மகாலட்சுமி தேவியாருக்கான மந்திரங்களை உச்சரித்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வெட்டிவேர் தீபம் ஏற்றுவதால் உங்களுக்கு இன்னும் பல நன்மைகள் நடக்கும்.
வெட்டிவேரை கொண்டு செல்ல வேண்டிய இடங்கள்
நீங்கள் தோல்விகளும் அவமானங்களும் பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் தொடர் வெற்றிகளை பெறுவதற்கு வெட்டிவேரை எங்கு சென்றாலும் கையில் எடுத்துச் செல்லலாம். பெண்பார்க்க செல்லும் போதும் ஏதாவது ஒரு வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் போதும், பரீட்சை எழுத போகும் போதும், புதிதாக தொழில் தொடங்கும் போதும், வீடு மனை வாங்கும் போதும் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் போதும் வெட்டிவேரை வைத்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிறகு செல்லலாம். மேலும் வெட்டிவேரை கையிலும் எடுத்துச் செல்லலாம் நிச்சயமாக உங்களுக்கு நல்லதே நடக்கும். வெட்டிவேர் தீபம் காமாட்சி அம்மன் விளக்கு மட்டும் இல்லாமல் கஜலட்சுமி விளக்கு வெள்ளி விளக்கு போன்ற அனைத்து விளக்குகளிலும் ஏற்றலாம். இந்த விளக்கு ஏற்றும் போது யாரும் அசுபமான விஷயங்களை பேசக்கூடாது. இந்த விஷயங்களை பின்பற்றி வெட்டிவேர் தீபம் ஏற்றி இதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பண வரவை அதிகரிக்கச் செய்யும் வெட்டிவேர்