இயற்கையிலேயே நல்ல என் நறுமணம் கொண்டதாகவும் அழகை கொடுக்கக் கூடியதாகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மண்ணுக்குள் கொத்து கொத்தாக இருக்கும் வெட்டிவேர் நாணல் மற்றும் தர்ப்பைப்புல் போல நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். இந்த வெட்டிவேரை பிடுங்கியா பிறகு வெட்டிவேர் பிள்ளையும் வேறையும் வெட்டி தனித்தனியாக எடுத்து நடுவில் இருக்கின்ற துண்டை மறுபடியும் நடவு செய்து வெட்டிவேரை வளர்க்கலாம்.
வெட்டிவேரின் பயன்கள்
வெட்டிவேர் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது வெட்டிவேரிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை கை, கால் வலி பிடிப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை வெட்டிவேர் குணப்படுத்தும். அதோடு மட்டுமில்லாமல் வெட்டிவேர் பவுடரை முகத்திற்கு தேய்த்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும் வாசனையாகவும் இருக்கும். எனவே குளியல் சோப்புகளில் வெட்டிவேர் பயன்படுத்தப்படும். வெட்டிவேரை தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வர சரும பிரச்சனைகள் மன அழுத்தம் உடல் சோர்வு நீர் கடுப்பு நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். கோடை காலங்களில் வீட்டில் உள்ள மண் பானையில் தண்ணீர் ஊற்றி அதில் வெட்டிவேரை போட்டு குடித்தால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு தண்ணீர் எப்பொழுதுமே குளுகுளுவென இருக்கும்.
பணவரவை அதிகரிக்கும் வெட்டிவேர்
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து பூஜை அறையில் வைத்து அதில் வெட்டிவேர் மற்றும் எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்தால் அதிலிருந்து வரும் ஆற்றல் வீடு முழுவதும் பரவி வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்வது இன்னும் விசேஷமானது. ஆரோக்கியத்தில் மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் வெட்டிவேர் பெரும் பங்கு வகித்து வீட்டிற்கு பணத்தையும் ஈர்த்துக் கொடுக்கும். வீட்டிற்கு பணத்தை ஈர்த்துக் கொடுப்பதற்கு பல்வேறு பொருட்கள் இருப்பினும் வெட்டிவேர் நம் வீட்டில் இருந்தால் பணம் அதிகமாக விளங்கும் என்று கருதப்படுகிறது. வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் வெட்டிவேரை வைத்தால் எதிர்மறை சக்திகள் கண் திருஷ்டி போன்றவைகள் நீங்கி தொழில் விருத்தி அடையும்.
வெட்டிவேரை பயன்படுத்தும் முறைகளும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும்
ஒரு வெள்ளை துணியை எடுத்து அதில் வெட்டிவேரை போட்டு அதனை முடிச்சு போட்டு வீடு முழுவதும் ஆங்காங்கே வைத்து விட்டால் அதிலிருந்து வரக்கூடிய நறுமணம் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். அதை நாம் சுவாசிக்கும் போது நமக்கு எப்பொழுதுமே ஒரு நேர்மறையான எண்ணங்கள் இருக்கும். நிறைய பேருக்கு மன அழுத்தத்தின் காரணமாக இரவில் தூக்கம் வருவது கிடையாது அந்த நேரத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டிவேரை முடிந்து வைத்து தூங்கினால் தூக்கம் நன்றாக வரும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். மாதத்திற்கு ஒரு முறை நம் வீட்டில் வைத்துள்ள அனைத்து வெட்டி வேர்களையும் எடுத்த வீட்டிற்கு வெளியே வைத்து அதன் மேல் ஒரு கற்பூரத்தையும் வைத்து நெருப்பு வைத்து அதை எரித்து விட்டு பிறகு வீட்டிற்கு புதிய வெட்டிவேரை பயன்படுத்தலாம்.
நேர்மறை ஆற்றலை கொடுக்கும் வெட்டிவேர்
பொதுவாக வெயில் காலத்தில் நிறைய பேருக்கு வியர்வை காரணமாக சரும பிரச்சனைகள் ஏற்படும் அந்த நேரத்தில் வெட்டிவேரை கழுவி ஊற வைத்து அரைத்து குளிக்கின்ற தண்ணீரில் கலந்து குளித்தால் சரும பிரச்சனைகள் நீங்கி சருமம் புத்துணர்ச்சியோடு இருக்கும். நாம் நம்முடைய உடைகளை வைத்திருக்கும் இடங்களில் வெட்டிவேரை துணியில் வைத்து முடிச்சு போட்டு வைத்தால் உடைகள் முழுவதும் வெட்டிவேரின் நறுமணம் பரவி அந்த உடைகளை நாம் அணியும் போதெல்லாம் நமக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பொருள்! இந்த பொருள் வீட்டில் இருந்தால் மட்டும் போது!