குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
கோவிலுக்கு சென்றாலும் அல்லது வீட்டில் பூஜை செய்து கடவுளை வணங்கினாலும் அனைவருமே பூஜை செய்து முடித்த பிறகு தெய்வத்தை வணங்கிய பிறகு குங்குமத்தையோ திருநிறையோ செந்தூரத்தையோ ஏதாவது ஒன்றை நெற்றியில் வைத்துக் கொள்வோம் தெய்வத்தின் பிரசாதமாக நாம் வெற்றியில் திருநீறு குங்குமம் வைப்பதற்கு அற
கோவிலுக்கு சென்றாலும் அல்லது வீட்டில் பூஜை செய்து கடவுளை வணங்கினாலும் அனைவருமே பூஜை செய்து முடித்த பிறகு தெய்வத்தை வணங்கிய பிறகு குங்குமத்தையோ திருநிறையோ செந்தூரத்தையோ ஏதாவது ஒன்றை நெற்றியில் வைத்துக் கொள்வோம் தெய்வத்தின் பிரசாதமாக நாம் வெற்றியில் திருநீறு குங்குமம் வைப்பதற்கு அறிவியல் பூர்வமான சில காரணங்களும் உள்ளது. அந்த வகையில் குங்குமத்தை நம்முடைய நெற்றியில் வைப்பதால் என்ன நிகழும் என்பதை பற்றியும் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவு ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குங்குமம்
திருநீரை விட குங்குமம் என்பது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாக இருக்கிறது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது குங்குமம் தான் வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து சுப காரியங்களிலும் குங்குமம் இருக்கும் பெண் தெய்வங்களுக்கு இந்த குங்குமம் மிகவும் உகந்ததாக திகழ்கிறது. மகாலட்சுமி பராசக்தி சரஸ்வதி காளி என அனைத்து பெண் தெய்வங்களுக்கும் குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் அவர்களுடைய அருளை பரிபூரணமாக நாம் பெறலாம். திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் குங்குமத்தை உயரிய ஒன்றாக தான் பார்ப்பார்கள் அதிலும் திருமணமான பெண்கள் நெற்றி வகுப்பில் குங்குமத்தை வைப்பது மிகவும் முக்கியமானது.
சீமந்த ரேகை
பெண்களுக்கு நெற்றி வகுப்பில் சீமந்த ரேகை என்கின்ற ஒரு ரேகை இருப்பதால் அந்த ரேகையில் நாம் தினமும் குங்குமம் வைப்பதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய நரம்பு தூண்டப்பட்டு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த குங்குமத்தை சில முறைகளில் நாம் வைக்கும் பொழுது நமக்கு பணவரவு அதிக அளவில் கிடைத்து அதிர்ஷ்டமும் உண்டாகும்.
திருமணமான பெண்கள் தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி கிழக்கு முகமாக பார்த்து இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தவாறு நெற்றி உச்சியிலும் நெற்றியிலும் திருமாங்கல்யத்திலும் குங்குமம் வைக்க வேண்டும். குங்குமம் வைக்கின்ற இந்த இடங்களில் எல்லாம் மகாலட்சுமி தாயார் இருப்பதாக கருதப்படுகிறது எனவே அந்த இடங்களில் குங்குமம் வைப்பது மகாலட்சுமி தயாரிக்க வைப்பதாக அர்த்தம்.
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க
திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்றால் தாழம்பூ குங்குமத்தை வைப்பது சிறப்பு கூறியது திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கின்ற பெண்கள் அனைவரும் இந்த தாழம்பூ குங்குமத்தை வாங்கி 5 சுமங்கலி பெண்களிடம் கொடுத்து அவர்களை நெற்றியில் வைக்க சொன்னால் சீக்கிரத்திலேயே திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
குங்குமத்தின் சிறப்பு
நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுப்பதன் மூலம் மகாலட்சுமிக்கு குங்குமத்தை தருவதற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும் ஆண்களும் புருவத்திற்கு மத்தியில் குங்குமத்தை வைப்பது மூலம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த குங்குமத்தை நெற்றியில் வைப்பதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டத்தோடு சேர்ந்து பண வரவும் ஏற்படும் படம் வீண் விரயம் ஆகாமல் நீண்ட நாட்கள் தடைப்பட்டு கொண்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்.
இதனையும் படியுங்கள் : விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்