விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

- Advertisement -

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால் விரதத்தை குறிக்கலாம். நம் சிந்தனைகள் அனைத்தையும் இறைவனை நோக்கி செலுத்துவதற்கான ஒரு வழிமுறைதான் இந்த விரதம். தெய்வத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு உண்ணாமல் இருப்பதால் நம்முடைய சிந்தனைகள் யாவும் ஒன்று இணைந்த மனம் ஆன்மா உடல் மூன்றும் சமநிலைப்படுத்தப்படும். எனவே இது மட்டுமில்லாமல் விரதம் இருப்பதால் பல வகையான நன்மைகள் நமக்கு உண்டாகும்.

-விளம்பரம்-

விரதம் இருக்கும் முறை

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதிரியான விரத முறை பின்பற்றப்படும். ஒவ்வொரு மதத்திலும் கூட ஒவ்வொரு விதமான விரத முறை பின்பற்றப்படும். ஒரு சிலர் முழு நாளும் உணவுகள் எதுவும் உண்ணாமல் ஏன் தண்ணீர் கூட குடிக்காமல் தெய்வத்தை நினைத்து விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் பால் பழங்கள் மட்டும் சாப்பிட்டுவிட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் ஏதாவது ஒரு நேர உணவை மட்டும் தவிர்த்து விட்டு தெய்வத்தை நினைத்து விரதம் இருப்பார்கள்.

- Advertisement -

இதில் எந்த முறைகளில் விரதம் இருந்தாலும் அதன் மூலம் பல நன்மைகள் நம் உடலுக்கு நடக்கும் அது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் நமக்கு நடக்கும். ஒரு சில ஆய்வுகளில் கூட விரதம் இருப்பதால் பலவிதமான நன்மைகள் நடக்கும் என்பதை நிரூபித்துள்ளனர். தெய்வத்துடைய அருளை முழுமையாக பெறுவதற்கு இந்த விரதமுறையை நாம் பின்பற்றினாலும் அதன் மூலம் நம் உடலுக்கும் ஒரு சில விதமான நன்மைகள் கிடைக்கும்.எனவே விரதம் இருப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நம்முடைய மனம் மிகவும் தூய்மையாக இருக்கும் நம்மை சுற்றியும் நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

விரதம் இருப்பதால் மனதில் உள்ள பல வகையான குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலை அடைந்து அதற்கான தீர்வுகளும் கிடைக்கும்.

-விளம்பரம்-

உடலில் உள்ள உயிர் செல்களை புதுப்பிக்கவும் ஆற்றல்களை புதுப்பிக்கவும் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

விரதம் இருப்பதால் நம் மனதை கட்டுப்படுத்தும் பக்குவம் நமக்கு கிடைக்கும் எனவே பிரபஞ்ச சக்தியுடன் நம்மால் இணைய முடியும்.

உள்ளுணர்வு சக்தியானது விரதம் இருப்பதால் அதிகரிக்கப்படும்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலும் மனமும் அமைதியை பெறும்.

-விளம்பரம்-

விரதம் இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றங்கள் குறைக்கப்பட்டு உடலில் உள்ள நச்சுக்களும் சுத்தப்படுத்தப்படுகிறது.

விரதம் இருப்பதால் உடல் எடையை கூட மிகவும் விரைவில் குறைக்க முடியும்தியானம் செய்பவர்களுக்கு விரதம் இருந்தால் அந்த பயிற்சியை ஒரு நிலையாக செய்ய முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலில் உள்ள ரத்தமும் சுத்தப்படுத்தப்படும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விரதம் முறையை அவர்களுக்கு ஏற்றவாறு பின்பற்றினால் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்