ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த செயற்கை வாசனை திரவியத்தின் மணமும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் இயற்கையாக இருக்கக்கூடிய வாசனை திரவியங்கள் நிறைய இருக்கின்றது. அந்த வகையில் இயற்கையா
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த செயற்கை வாசனை திரவியத்தின் மணமும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் இயற்கையாக இருக்கக்கூடிய வாசனை திரவியங்கள் நிறைய இருக்கின்றது. அந்த வகையில் இயற்கையான வாசனை திரவியங்களில் ஒன்றான ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத ஒரு சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோவிலில் பயன்படுத்தப்படும் ஜவ்வாது
நம்முடைய முன்னோர்களாலும் சித்தர்களாலும் ஆயிரம் வருடத்திற்கு மேலாக இந்த ஜவ்வாது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மீகத்தில் இருப்பவர்களும் கூட இந்த ஜவ்வாதை நிறைய பயன்படுத்துவார்கள். இந்த ஜவ்வாது ஆன்மீக பயிற்சி மிகவும் வலுவாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஜவ்வாது சந்தன கட்டை மற்றும் வாசனை உள்ள பல மலர்களையும் மூலிகைகளையும் சேர்த்து செய்யப்பட்டது. இந்த ஜவ்வாதை இயற்கை வாசனை திரவியமாக மட்டும் இல்லாமல் கோயில்களிலும் அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனென்றால் ஜவ்வாது நேர்மறையான ஆற்றலும் மனமும் கோவில்களில் ஒரு நல்ல வாசனையும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.
இறையாற்றல் நிறைந்த ஜவ்வாது
இந்த ஜவ்வாது நிறைய இறையாற்றல் நிறைந்திருப்பதால் ஜவ்வாது இருக்கின்ற இடங்களில் எல்லாம் எதிர்மறை சக்திகள் அழிக்கப்பட்டு நேர்மறையான சக்திகளும் இறையாற்றலும் நிறைந்திருக்கும். நாட்டு மருந்து கடைகளில் ஜவ்வாது பவுடராகவும் பேஸ்ட் ஆகவும் கிடைக்கின்றது. இந்த ஜவ்வாது நிறைய நறுமணம் மட்டுமில்லாமல் இறையாற்றலும் நேர்மறை சக்திகளும் நிறைந்திருக்கிறது. அதனாலையே ஜவ்வாதை நாம் பல வகையான இடங்களில் பயன்படுத்துகிறோம். அதேபோல் இந்த செவ்வாதை நாம் வீட்டில் பயன்படுத்தினாலும் வீட்டில் இறையாற்றல் நிறைந்திருக்கும்.
ஜவ்வாதின் நன்மைகள்
இந்த ஜவ்வாது காலபைரவர்க்காகவும் சிவன் கோவிலுக்கும் சமர்ப்பிக்கப்படுவதால் குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கக்கூடிய அனைத்து வகையான தடைகளும் நீங்கும். வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி படத்திற்கு ஜவ்வாது கலந்த சந்தனம் குங்குமத்தை வைக்கும் போது வீடு முழுவதும் ஒரு நல்ல நேர்மறையான மணம் இருக்கும். அந்த சந்தன குங்குமத்தை நாமும் வைத்துக் கொள்ளலாம். மகாலட்சுமி இந்த ஜவ்வாது வாசம் செய்வாள் எனவே வீட்டில் இதனை உபயோகிப்பதால் வீட்டில் செல்வ வளமும் மகிழ்ச்சியும் பெருகும். மேலும் இந்த ஜவ்வாதை நாம் தியானம் செய்யும் போது உபயோகப்படுத்தினால் மனதையும் ஒருநிலைப்படுத்தி அதன் பலனை முழுவதுமாக அடைய முடியும். வீட்டில் விளக்கு ஏற்றும் போது வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் நல்லெண்ணெயுடன் இந்த ஜவ்வாதியும் சேர்த்து விளக்கு ஏற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்து வீட்டில் குலதெய்வம் வருவதற்கும் உதவும். மனதில் யாருக்காவது நீக்க முடியாத பயன்கள் இருந்தால் அவர்களும் இந்த ஜவ்வாதை பயன்படுத்தலாம்.
ஜவ்வாதின் நறுமணம்
தினமும் குளித்து முடித்த பிறகு நம்முடைய உடலில் சிறிதளவு ஜவ்வாது எடுத்து தடவினாலே போதும் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் நேர்மறை ஆற்றலுடனும் இருக்க முடியும். குழந்தைகளுடைய உடையிலும் சிறிதளவு ஜவ்வாது தடவுவதால் அவர்களுக்கு அந்த வாசனையால் திருஷ்டி ஏற்படாது என்று சித்தர்கள் அரசர்கள் என அனைவரும் இதனுடைய பயன்களை முழுவதுமாக அறிந்ததனால் மட்டுமே இதனை அவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்தார்கள் அதனால் மக்களாகிய நாமும் இதனுடைய பலன்களை முழுவதுமாக பெறுவதற்கு ஜவ்வாதை நம் வீட்டில் பயன்படுத்தலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க இதை செய்யுங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும்!