சிவனை எந்த கிழமையில், எந்த நேரத்தில் வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்!!
கோவிலுக்கு சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். அதனால் நம்முடைய பிரச்சனைகள் தீரும். நன்மைகள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இறைவனைப் பொறுத்த வரை நம்மை முழுமையாக அர்ப்பணிப்பது நிலையான பக்தி ஆகும். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் மீது முழுமையான பக்தி இருக்க வேண்டும்.
கோவிலுக்கு சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். அதனால் நம்முடைய பிரச்சனைகள் தீரும். நன்மைகள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இறைவனைப் பொறுத்த வரை நம்மை முழுமையாக அர்ப்பணிப்பது நிலையான பக்தி ஆகும். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் மீது முழுமையான பக்தி இருக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகளோ, வேண்டுதல்களோ இருப்பது கிடையாது. அவரவருக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு உரிய நாள், கிழமை, நேரத்தில் சென்று இறை தரிசனத்தை பெறுவதால் நம்முடைய வழிபாட்டிற்கான முழு பலனையும் பெற முடியும். அதேபோல் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நம்முடைய வேண்டுதல் நிறைவேற எந்த நாளில், எந்த நேரத்தில் சிவன் கோவிலுக்கு செல்லலாம்? இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
சிவ வழிபாட்டுக்கு ஏற்ற காலம்
கோவிலுக்கு செல்வதற்கு நேரம் காலம் பார்க்கக் கூடாது என்பார்கள். இருந்தாலும் நாம் செல்லும் கிழமை, திதி, நட்சத்திரம், காலம் ஆகியவற்றிற்கும், அந்த கோவிலுக்கு சென்றதால் கிடைக்கும் பலன்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு என சொல்லப்படுகிறது. சிவனுக்கு உகந்த காலங்களில் முக்கியமானது பிரதோஷ காலம் ஆகும். பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து கோவிலுக்குச் சென்றால் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறலாம். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். அதேபோல் மற்ற நாட்களை விட பவுர்ணமி நாளிலும் சிவவழிபாடு மேற்கொள்ளலாம்.
பிரதோஷ வழிபாடு பலன்கள்
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். சனிக்கிழமை வரும் மகாப் பிரதோஷத்தன்று இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும். பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சிவபெருமான் முக்கிய இந்து கடவுள்களில் ஒருவர். சிவன் என்றால் மங்களகரமானவர். சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. காலையில் சிவனை வழிபட்டால் அறச்சிந்தனையை வளருமாம். முற்பகலில் சிவபெருமானை வழிபட்டால் செல்வம் உயருமாம். மாலையில் சிவதரிசனம் செய்தால் விரும்பியது கிடைக்குமாம்.
நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசிப்பது ஏன்?
நந்தி ஒரு பசு வடிவம் கொண்ட நந்திகேஸ்வரர், சிவபெருமானின் வாகனமாகவும் பாதுகாவலராகவும் விளங்குகிறார். இன்றும் சிவபெருமானை தரிசிப்பதற்கு முன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்க்கும் பழக்கமுண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதே போல் சிவனுக்கும், நந்திக்கும் இடையில் செல்ல கூடாது என்பதும் சிவாலயத்தில் கடைபிடிக்க வேண்டிய விதியாகும். பொதுவாக சிவபெருமான் எப்போதும் தாண்டவம் ஆடுபவர் தான். அவர் பிரதோஷ வேளையில், ஆனந்தமாக நடனமாடுவார். இதை முதன்முதலாக நந்திதேவர் பார்த்தபோது, அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் அவரது உடல் பருத்துக் கொண்டே போனது. அனால் அது தெரியாத சிவ பூதகணங்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை பார்த்து தரிசித்தனர். இதன் காரணமாக, பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவழியாக சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
லிங்கோத்பவ கால வழிபாடு
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம். அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில்
நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.
சிவ வழிபாட்டு கிழமைகளும் அதன் பலன்களும்
ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி, தைரியம் ஏற்படும்.
திங்கட்கிழமை – திங்கள் கிழமையில் சிவனை நினைந்து விரதமிருந்தால் எவ்வளவு மன கஷ்டங்கள் இருந்தாலும் நீங்கும். திங்கள் கிழமையில் வரும் அமாவாசை நாளில் இராகு காலத்தில் சிவனை தரிசனம் செய்தால் குழப்பமான சூழ்நிலைகள் மாறும்.
செவ்வாய் கிழமை – செவ்வாய்க்கிழமை சிவபெருமானை நினைத்து அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டால் பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிழமை அன்று வரும் எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
புதன் கிழமை – புதன் கிழமை மனதார சிவபெருமானை நினைத்து வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும். அந்த நாளில் அபிஷேகம் செய்து வழிபட்டால் தொழில் உத்தியோகம் வளர்ச்சி, உயர் பதவி கிடைக்கும்.
வியாழக்கிழமை – வியாழக்கிழமைகளில் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம். வியாழக்கிழமை இரவு சுவாமி பள்ளியறைக்கு எழுந்தருளும் நேரத்தில் செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை – வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசித்தால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் சிவனை வழிபட்டால் கடன், தரித்திரம் முதலான பொருளாதாரச் சிக்கல்களும் பிரச்சினைகளையும் நீங்கும்.
சனிக்கிழமை – சனிக்கிழமை சிவனை வழிபட்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம். இராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கர்ம வினைகள் கலைந்து விடும்.
இதனையும் படியுங்கள் : சனிதோஷத்தின் போது சனீஸ்வரரை குளிர்விக்கும் பரிகார முறைகள்!