சூப்பரான பாய் வீட்டு மட்டன் சால்னா ஒரு தரம் இப்படி வீட்டிலயே செஞ்சி கொடுங்க பாருங்க அசந்து போய்விடுவார்கள்!

பரோட்டா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இரண்டு வேளை காலை, இரவு என பரோட்டாவிற்கு மட்டன் சால்னா ஊற்றி குடுத்தால் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பரோட்டா. இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப

By Prem Kumar · 29/1/2024

பரோட்டா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இரண்டு வேளை காலை, இரவு என பரோட்டாவிற்கு மட்டன் சால்னா ஊற்றி குடுத்தால் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பரோட்டா. இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது!! என்று பாடும் வரிக்கு ஏற்ப இந்த வாழ்கையே நன்றாக ருசித்து சாப்பிடத்தான். அதுவும் பரோட்டா மட்டன் சால்னா என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 3 வேளையும் இதை கொடுத்தாலும் நன்றாக சாப்பிட எப்போதும் 1 கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். பாய் வீட்டு மட்டன் சால்னா, மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா, ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா. இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாதது பாய் வீட்டு மட்டன் சால்னா. உணவுக்கும், நட்புக்கும் மதம் ஒரு தடை அல்ல. உங்களுக்கு முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாளிகள் தான்.

இஸ்லாமியர்களின் திருமணங்களில் கறியின் மணத்துடன் ஆவி பறக்க இலையில் பரிமாறப்படும் இந்த மட்டன் சால்னா மிகவும் விரும்பத்தக்க ஒன்று. இஸ்லாமியர்களின் இந்த மட்டன் சால்னா கலாச்சாரம், அவர்களின் தனி அடையாளமாகவே உள்ளது. இப்படி தனக்கென ஒரு தனி சுவையை கொண்டிருக்கும் இந்த பாய் வீட்டு சால்னாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒரு புறம் கை பக்குவம் இருந்தாலும், சால்னாவுக்கு என தனி மணத்தையும், சுவையையும் கொடுப்பது அவர்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் அந்த பிரியாணி மசாலா தான். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த மட்டன் சால்னாவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான மட்டன் சால்னாவை இந்த சண்டே வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பாய் வீட்டு ஸ்டைல் ருசியான கீ-ரைஸ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி!

Recipes AMP · Quick view
View full