சூப்பரான பாய் வீட்டு மட்டன் சால்னா ஒரு தரம் இப்படி வீட்டிலயே செஞ்சி கொடுங்க பாருங்க அசந்து போய்விடுவார்கள்!

- Advertisement -

பரோட்டா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இரண்டு வேளை காலை, இரவு என பரோட்டாவிற்கு மட்டன் சால்னா ஊற்றி குடுத்தால் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பரோட்டா. இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது!! என்று பாடும் வரிக்கு ஏற்ப இந்த வாழ்கையே நன்றாக ருசித்து சாப்பிடத்தான். அதுவும் பரோட்டா மட்டன் சால்னா என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 3 வேளையும் இதை கொடுத்தாலும் நன்றாக சாப்பிட எப்போதும் 1 கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். பாய் வீட்டு மட்டன் சால்னா, மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா, ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா. இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாதது பாய் வீட்டு மட்டன் சால்னா. உணவுக்கும், நட்புக்கும் மதம் ஒரு தடை அல்ல. உங்களுக்கு முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாளிகள் தான்.

-விளம்பரம்-

இஸ்லாமியர்களின் திருமணங்களில் கறியின் மணத்துடன் ஆவி பறக்க இலையில் பரிமாறப்படும் இந்த மட்டன் சால்னா மிகவும் விரும்பத்தக்க ஒன்று. இஸ்லாமியர்களின் இந்த மட்டன் சால்னா கலாச்சாரம், அவர்களின் தனி அடையாளமாகவே உள்ளது. இப்படி தனக்கென ஒரு தனி சுவையை கொண்டிருக்கும் இந்த பாய் வீட்டு சால்னாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒரு புறம் கை பக்குவம் இருந்தாலும், சால்னாவுக்கு என தனி மணத்தையும், சுவையையும் கொடுப்பது அவர்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் அந்த பிரியாணி மசாலா தான். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த மட்டன் சால்னாவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான மட்டன் சால்னாவை இந்த சண்டே வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

பாய் வீட்டு மட்டன் சால்னா | Bhai Veetu Mutton Salna Recipe In Tamil

பரோட்டா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? இரண்டு வேளை காலை, இரவு என பரோட்டாவிற்கு மட்டன் சால்னா ஊற்றி குடுத்தால் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பரோட்டா. இந்த பொறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கெடச்சது!! என்று பாடும் வரிக்கு ஏற்ப இந்த வாழ்கையே நன்றாக ருசித்து சாப்பிடத்தான். அதுவும் பரோட்டா மட்டன் சால்னா என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 3 வேளையும் இதை கொடுத்தாலும் நன்றாக சாப்பிட எப்போதும் 1 கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். பாய் வீட்டு மட்டன் சால்னா, மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா, ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா. இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாதது பாய் வீட்டு மட்டன் சால்னா. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த மட்டன் சால்னாவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான மட்டன் சால்னாவை இந்த சண்டே வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Bhai Veetu Mutton Salna
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி மட்டன்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் புதினா, கொத்தமல்லி விழுது
  • 1 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் மட்டன் மசாலா
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 6 முந்திரி
  • 4 வர ‌மிளகாய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் மட்டனை சுத்தம் செய்து நறுக்கி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
  • அதன்பிறகு வேகவைத்த மட்டனை சேர்த்து கலந்து அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மட்டன் மசாலா, உப்பு, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • மட்டன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பாய் வீட்டு மட்டன் சால்னா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 105kcal | Carbohydrates: 15.9g | Protein: 42.2g | Fat: 8.6g | Sodium: 151mg | Potassium: 235mg | Fiber: 11.9g | Vitamin A: 16IU | Vitamin C: 34mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் : பாய் வீட்டு ஸ்டைல் ருசியான கீ-ரைஸ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி!