நவராத்திரி நாட்களில் கூற வேண்டிய புவனேஸ்வரி மந்திரம்!!

முப்பெரும் தேவியர்களின் சங்கமமாக திகழக்கூடியவள் தான் புவனேஸ்வரி. புவனேஸ்வரி தாயார் அசுரனை வதம் செய்த விழாவை தான் நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். புவனேஸ்வரி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு முப்பெரும் தேவியர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும். அதனால் நவராத்திரி நாட்களில்

By Prem Kumar · 26/9/2025

முப்பெரும் தேவியர்களின் சங்கமமாக திகழக்கூடியவள் தான் புவனேஸ்வரி. புவனேஸ்வரி தாயார் அசுரனை வதம் செய்த விழாவை தான் நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். புவனேஸ்வரி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு முப்பெரும் தேவியர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும். அதனால் நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன் இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமி மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி என்று பாகுபாடு பார்க்காமல் நவராத்திரி நாட்கள் முழுவதுமே புவனேஸ்வரி தயாரை வழிபாடு செய்யும்பொழுது முப்பெரும் தேவியர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

புவனேஸ்வரி தாயார் வழிபாடு

புவனேஸ்வரி தாயை வழிபாடு செய்வதோடு புவனேஸ்வரி தாயாருக்கு உரிய பீஜ மந்திரத்தை உச்சரிக்கும் போது புவனேஸ்வரி தாயார் மனமகிழ்ந்து நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார். அந்த மந்திர வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நவராத்திரி திருவிழா

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை நவராத்திரி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி நடைபெறக்கூடிய நாட்களில் புவனேஸ்வரி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை கூறுபவர்கள் அசைவத்தை தவிர்க்க வேண்டும். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு பிறகு மாலை நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மாலை நேரத்தில் முடிந்தால் குளிக்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

மந்திரம் உச்சரிக்க வேண்டிய முறை

வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு முழு மனதோடு பிரார்த்தனை செய்து உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை கூறிவிட்டு பிறகு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
புவனேஸ்வர்யை நமஹ”

உங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து இந்த மந்திரத்தை 10 நிமிடம் ஆவது உச்சரித்தால் நிச்சயமாக உங்களுக்கு புவனேஸ்வரி தாயாரின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்த மந்திர வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம் கோவிலுக்கு சென்றும் செய்யலாம். பத்து நிமிடம் மனதார நிறுத்தி நிதானத்துடன் இந்த மந்திரத்தை புவனேஸ்வரி தாயை நினைத்து உச்சரிக்க வேண்டும். முழு மனதோடு இதனை செய்தால் நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் சீக்கிரத்திலேயே நிறைவேறும்.

இதனையும் படியுங்கள் : நவராத்திரியில் வீட்டில் இப்படி கொலு வைத்தால் அம்பிகை வீட்டில் நிரத்தரமாம குடியேறுவாள்!

Recipes AMP · Quick view
View full