பெண்களின் பிறந்த மாதமே அவர்களின் குணம் மற்றும் அளுமையை சொல்லும்! நீங்கள் பிறந்த மாதம் எது?

பிறந்த நாள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒருவர் பிறந்த மாதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த மாதத்திற்கான பலன்கள் தெரிந்து கொள்வது நல்லது. பெண்கள் ஏன் எப்போதும் அதிகளவில் கோபப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என ஆண்கள் புலம்புவார்கள். ஒருவரு

By Prem Kumar · 3/10/2024

பிறந்த நாள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒருவர் பிறந்த மாதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த மாதத்திற்கான பலன்கள் தெரிந்து கொள்வது நல்லது. பெண்கள் ஏன் எப்போதும் அதிகளவில் கோபப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என ஆண்கள் புலம்புவார்கள். ஒருவருடன் பழகுவதற்கு முன்பு அவர்களை பற்றி தெரிந்துகொள்வது மிக கடினம். அவ்வாறு ஒருவரை குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால், பெண்களின் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்களின் ஆளுமைகளை தெரிந்து கொள்ளலாம். ஆகையால் உங்கள் துணையின் இயல்பு பற்றி சில விஷயங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், வாழ்க்கை மிகவும் எளிதாகிவிடும். ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டின் 12 மாதங்களில் பிறந்த பெண்களின் ஆளுமை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக மட்டுமின்றி புத்திசாலிகளாகவும் திகழ்வார்கள். இந்த பெண்கள் விலையுயர்ந்த ஆடைகளை விரும்புகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். தனது லட்சியத்தை நோக்கி மிக வேகமாக பயணிப்பார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும்.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் புத்திசாலிகள் தான், ஆனாலும் தந்திரமாக செயல்படுவார்களாம். அவர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானது. ஆனால் அவர்கள் இயற்கையாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்களாம். மிக தந்திரமானவர்களான இவர்கள், அதிகளவில் அன்பு, பாசத்தை வெளி காட்டினாலும் தன் உணர்ச்சிகளை அடிக்கடி வெளிக்காட்டுவதில்லை. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் மென்மையான இயல்புடையவர்கள். தூய்மை எண்ணம் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கு மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை நம்பி எந்த ரகசியத்தையும் கூறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதம் பிறந்த பெண்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களின் செயல்கள் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருப்பதால் பலரும் அவர்களை நேசிப்பார்கள். இவர்கள் அதிகம் பேச விரும்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே இவர்களுக்கு பிடிக்காது.

மே

மே மாதத்தில் பிறந்த பெண்கள் கடின உள்ளமும், பிடிவாத குணமும் உடையவர்களாக இருப்பார்கள். மிகவும் மன வலிமையும், மன உறுதியும் இருப்பதால் அவர்கள் விரைவில் கோபப்படுவார்களாம். இவர்களின் ஆளுமை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமையை கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் நன்றாக ஊர் சுற்றுவார்களாம். இவர்களுக்கு திரைப்படங்கள் மீது அதிகளவில் ரசனை இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புவார்களாம். இவர்களை எந்த விஷயத்திற்கும் சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தைரியமாக செயல்படுவார்களாம். இந்த பெண்கள் ரிஸ்க் எடுப்பதை அசால்ட்டாக செய்வார்களாம். மேலும், படைப்பாற்றல், இசையை இவர்கள் விரும்புகிறார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் நகைச்சுவை பிரியர்கள். மிகவும் ரோஷக்காரர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பணக்காரர்கள் அல்லது தொழிலதிபர்களாக மாற விரும்புவார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.

செப்டம்பர்

செப்டம்பர் மாதம் பிறந்த பெண்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுத்து பின் வருத்தப்படுவார்களாம். இந்த பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்றாலும், அச்சமற்றவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும். இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள்.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் பேச விரும்புவார்கள். இவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த பெண்கள் இவர்களுக்கும் எளிதில் கோபம் வரும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும். இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது.

நவம்பர்

நவம்பரில் பிறந்த பெண்கள் தங்கள் சொந்த விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள். எப்போதும் ரகசியம் காப்பார்கள். தங்கள் வேலையில் கரெக்டாக இருப்பார்களாம். மேலும், அனைவரிடம் இருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக விஸ்வாசமும், லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பேசுவார்களாம். மேலும், தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இதனையும் படியுங்கள் : மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

Recipes AMP · Quick view
View full