Advertisement
உடல்நலம்

இதய ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் இஞ்சி – எலுமிச்சை!

Advertisement

இதய ரத்தக்குழாயில் அடைப்பு, இதய வால்வு சுருங்கிப்போவது என இது போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி, எலுமிச்சம்பழத் தோல் மட்டுமே போதும். ஒரு முழு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டு துண்டாக வெட்டி சாறு பிழிய வேண்டும். சாறு பிழிந்ததும் அந்தச் சாறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு எலுமிச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு எலுமிச்சம்பழத்தை துண்டு துண்டாக வெட்டி எடுக்க வேண்டும். வெட்டி எடுத்த முழு எலுமிச்சம்பழத்தின் தோலுக்கு சரி சமமாக இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சியை பயன்படுத்தும்போது அதன் தோலை நீக்க வேண்டுமென்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு இஞ்சியை துண்டு துண்டாக நறுக்க வேண்டும். இதையடுத்து இஞ்சியும், எலுமிச்சைத் தோலும் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதிகமாக கொதிக்க விட வேண்டாம். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான சூட்டுடன் இருக்கும்போதே காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். இப்படி ஒரு மண்டலம்… அதாவது 48 நாள் குடிக்க வேண்டும். ஆக, மொத்தம் 48 நாள் இதைக் குடித்தால் ஏற்கெனவே நாம் சொன்னதுபோன்று இதய ரத்தக்குழாய் அடைப்பு, இதய வால்வுச் சுருக்கம் மட்டுமல்லாமல் இதயம் தொடர்பான எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

Advertisement
Advertisement

இதய நோய் மட்டுமல்லாமல் செரிமானக்கோளாறுகளும்கூட சரியாகும். உடம்பில் ஆங்காங்கே இருக்கும் நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். முக்கியமாக கெட்ட கொழுப்புகள் எல்லாம் வெளியேறும். எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் கூட இந்த பானத்தை குடித்து பலன் பெறலாம். மூட்டு வலியைக் குறைக்கும் தன்மை இஞ்சிக்கு இருக்கிறது. அதனால் இஞ்சி, எலுமிச்சைத் தோல் இரண்டும் சேர்ந்த கலவையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு பானமாக தயார் செய்து குடித்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். மருந்தை மருந்தாக மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நிச்சயமா பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழத்தை விட அதன் தோலில் வைட்டமின் சி, ஏ சத்துகளும் கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டி போன்ற சத்துகளும் அதிகமாக உள்ளன. எலுமிச்சம் பழத்தின் சாறை நாம இப்போ பயன்படுத்த போறது இல்லன்னாலும் அந்தச் சாறுல உயர்தரமான பொட்டாசியம் இருக்கு. அதைக் குடிக்கிறதால இதய நோய்களை சரியாகும். நேரம் கிடைக்கும்போது எலுமிச்சை சாறையும் கூட குடித்து பலன் பெறலாம்.

Advertisement
  • எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் 9551486617
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

25 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

3 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

13 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

14 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

15 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

17 மணி நேரங்கள் ago