இதய ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் இஞ்சி – எலுமிச்சை!

- Advertisement -

இதய ரத்தக்குழாயில் அடைப்பு, இதய வால்வு சுருங்கிப்போவது என இது போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி, எலுமிச்சம்பழத் தோல் மட்டுமே போதும். ஒரு முழு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டு துண்டாக வெட்டி சாறு பிழிய வேண்டும். சாறு பிழிந்ததும் அந்தச் சாறை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு எலுமிச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு எலுமிச்சம்பழத்தை துண்டு துண்டாக வெட்டி எடுக்க வேண்டும். வெட்டி எடுத்த முழு எலுமிச்சம்பழத்தின் தோலுக்கு சரி சமமாக இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சியை பயன்படுத்தும்போது அதன் தோலை நீக்க வேண்டுமென்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு இஞ்சியை துண்டு துண்டாக நறுக்க வேண்டும். இதையடுத்து இஞ்சியும், எலுமிச்சைத் தோலும் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதிகமாக கொதிக்க விட வேண்டாம். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான சூட்டுடன் இருக்கும்போதே காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். இப்படி ஒரு மண்டலம்… அதாவது 48 நாள் குடிக்க வேண்டும். ஆக, மொத்தம் 48 நாள் இதைக் குடித்தால் ஏற்கெனவே நாம் சொன்னதுபோன்று இதய ரத்தக்குழாய் அடைப்பு, இதய வால்வுச் சுருக்கம் மட்டுமல்லாமல் இதயம் தொடர்பான எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

- Advertisement -

இதய நோய் மட்டுமல்லாமல் செரிமானக்கோளாறுகளும்கூட சரியாகும். உடம்பில் ஆங்காங்கே இருக்கும் நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். முக்கியமாக கெட்ட கொழுப்புகள் எல்லாம் வெளியேறும். எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் கூட இந்த பானத்தை குடித்து பலன் பெறலாம். மூட்டு வலியைக் குறைக்கும் தன்மை இஞ்சிக்கு இருக்கிறது. அதனால் இஞ்சி, எலுமிச்சைத் தோல் இரண்டும் சேர்ந்த கலவையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு பானமாக தயார் செய்து குடித்தால் நிறைய பலன்கள் கிடைக்கும். மருந்தை மருந்தாக மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நிச்சயமா பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழத்தை விட அதன் தோலில் வைட்டமின் சி, ஏ சத்துகளும் கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டி போன்ற சத்துகளும் அதிகமாக உள்ளன. எலுமிச்சம் பழத்தின் சாறை நாம இப்போ பயன்படுத்த போறது இல்லன்னாலும் அந்தச் சாறுல உயர்தரமான பொட்டாசியம் இருக்கு. அதைக் குடிக்கிறதால இதய நோய்களை சரியாகும். நேரம் கிடைக்கும்போது எலுமிச்சை சாறையும் கூட குடித்து பலன் பெறலாம்.

-விளம்பரம்-
  • எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் 9551486617

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here