அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் ஆச்சார்யா டாக்டர் ஸ்ரீ வர்மா இப்பொழுது தமிழகத்தில்..12 வருட தியான வாழ்க்கைக்கு பிறகு ஆயுர்வேதத்தையும் அறிவியலையும் இணைத்து உடல், மனம் மற்றும் ஆன்மா சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தர முடியும் என்கிறார். நோய்களை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அளித்து குணமளிக்கும் வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதே தனது வாழ்நாள் லட்சியம் எனும் ஆச்சார்யா அவர்களை சந்தித்து பேட்டி கண்டபோது,
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்து விட்டு சென்ற முக்கிய பாடம். தற்போதுள்ள காலகட்டத்தில் பண வளத்தை விட மன வளமே முக்கியம். ஒருவரின் உடலின் நலம், மனம் ஆகியவை தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கிய காரணம். நோய்க்கு வலியை தீர்ப்பது என்பது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. ஆனால், நோயின் மூல காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் தான் அது நிறந்தர தீர்வாக இருக்க முடியும். உடலும் மனதும் நலமாக இருந்தால் தான் வாழ்க்கை சமநிலைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அப்படி நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை மட்டுமே இலக்காக கொண்டவர் ஹீலிங் மற்றும் ஹோலிஸ்டிக் வெல்னஸ் தெரபியல் முன்னோடியாக விளங்கக்கூடிய டாக்டர் ஸ்ரீ வர்மா அவர்கள். இவரைப் பற்றிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் மிகவும் ஆழமாக பார்க்கலாம்.
ஆயுர்வேதத்தில் புரட்சியை ஏற்படுத்திய டாக்டர் ஸ்ரீ வர்மா
குணப்படுத்தவே முடியாத பல நோய்களை கூட மறு வரையறையை செய்து நோய்களை குணப்படுத்துவதற்கான பல முயற்சிகளை இவர் எடுத்துள்ளார். இவருடைய தத்துவத்தின்படி, ஆயுர்வேதம் என்பது மருத்துவர் மருத்துவம் நோயாளி சுற்றுச்சூழல் காலம் உதவியாளர் என அனைத்து காரணிகளுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவு உள்ளது என்று நிரூபித்துள்ளார் இதுதான் அவரை வழக்கமான சிகிச்சை முறையில் இருந்து மாற்றி அமைத்து ஒரு புதிய சிகிச்சை முறையை ஏற்படுத்த தூண்டியுள்ளது. இவருடைய சிகிச்சை முறையை பயன்படுத்தி ஆயுர்வேதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பண்டைய மருத்துவ முறையும் & நவீன கால மருத்துவ முறையும்
1999 ஆம் ஆண்டு டாக்டர் ஸ்ரீ வர்மா ஹெனோக் மார்சியோ உடன் இணைந்து ஸ்ரீவர்ம குருகுலம் ஒன்றை நிறுவியுள்ளார். இவருடைய தலைமையின் கீழ் இயங்கக்கூடிய ஸ்ரீ வர்ம குரு குலத்தில் பண்டைய மருத்துவ முறைகளும் நவீன கால மருத்துவ முறைகளும் சேர்ந்து இருக்கும் படி அங்குள்ள நிபுணர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நோயுடைய மூலகாரணத்தை கண்டறிவதில் இருந்து தீர்வு அளிப்பது வரையில் முழுமையான ஆரோக்கியத்தை வழங்க முடியும் என்பதையும் டாக்டர். ஸ்ரீ வர்மா அவர்கள் கண்டறிந்தார். இதனைப் பற்றிய பல அற்புதமான ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.
ஆயுர்வேதத்திற்கே தன்னை அர்ப்பணித்த டாக்டர் ஸ்ரீ வர்மா
தமிழ்நாடு கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள திருவிதாங்கூரில் யோகா தியானம் வர்மா ஆயுர்வேதம் போன்ற பாரம்பரியமான கலைகளில் நிபுணத்துவம் பெற்ற பரம்பரையை சேர்ந்தவர்தான் டாக்டர் ஸ்ரீ வர்மா அவர்கள். 18 வயதில் இருந்தே தாத்தா மற்றும் தந்தையின் முறையான பயிற்சியின் மூலம் பட்டப்படிப்பை முடித்து ஆறு ஆண்டு காலங்கள் இந்த ஆயுர்வேத பயிற்சிக்கு அவரை அர்ப்பணித்த பிறகு தான் ஆயுர்வேதாச்சாரியார் என்ற கௌரவத்தை இவர் பெற்றார். இவர் இந்த பரம்பரையில் பிறந்ததாலேயே சிறு வயதிலிருந்து இதில் ஒரு ஆர்வம் எழுந்து இன்று இந்த துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.

டாக்டர் ஸ்ரீவர்மா அவர்களின் ஆன்மீக அர்ப்பணிப்பு
தொழில் சார்ந்து நிறைய மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ள டாக்டர். ஸ்ரீ வர்மா அவர்கள் ஆயுர்வேத துறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியதற்கு இணையாக ஆன்மீகத்திலும் இவர் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் இயங்கக்கூடிய ஆன்மீக அமைப்பான கன்ஹா சாந்தி வனத்தில் இருக்கக்கூடிய வெல்னஸ் என்ற அமைப்புடன் இணைந்து ஆன்மீக ஆரோக்கியத்தையும் அவருடைய ஆயுர்வேத ஆரோக்கியத்தையும் இணைத்து உடல் ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையையும் பலப்படுத்தி வருகின்றார். இதற்காக அவர் பல ஆன்மீகம் சார்ந்த விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.