Home உடல்நலம் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் என்னென்னு தெரியுமா?

ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் என்னென்னு தெரியுமா?

என்னதான் நாம் தினம்தோறும் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் நாம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சேர்த்து வைத்த பணத்தை கூட நம்மால் பயன்படுத்த முடியாது. அதனால் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்று இருக்கும் காலகட்டத்தில் அவசரமான உலகத்தில் நம்மை நாம் பார்த்துக் கொள்வதே இல்லை. ஆனால் நாம் எப்பொழுதும் நம் உடலை பாதுகாத்து வைத்துக்கொள்ள ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே நம்மை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய ஒரு சில விஷயங்கள்.

-விளம்பரம்-

உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல்

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம்முடைய உடல் எடையை சரியான அளவில் நிர்வகித்தல் மிகவும் முக்கியம்.BMI படி நம்முடைய உடல் எடையை பார்த்துக் கொண்டால் அது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் BMI படி உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நல பரிசோதனை

இப்பொழுதெல்லாம் வரும் முன் காப்பதே மிகவும் அந்த வகையில் இந்த காலகட்டத்தில் உள்ள உணவு முறைகளுக்கு நோய்கள் எந்த ரூபத்தில் இருந்து வருகிறது என்று நமக்கே தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வருடத்தில் இரண்டு முறை முழு உடலையும் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.

புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடுதல்

தீய பழக்கமான இந்த புகை பிடித்தல் மூலம் புற்றுநோய் சுவாச கோளாறுகள் இதய சம்பந்தமான நோய் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அது மரணத்திற்கு உபயோகிக்கிறது எனவே புகைப்பிடித்தல் பழக்கத்தை அடியோடு கைவிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சிறந்தது

மது அருந்துதல் பழக்கத்தை கைவிடுதல்

மது அருந்துதலையும் பொறுத்தவரையில் ஒரு முறை குடித்துப் பார்ப்போம் என்ற வகையில் தான் தொடங்குகிறது அதுவே காலப்போக்கில் முழுமையாக நீங்கள் அடிமையாகுவதற்கு காரணமாகிவிடுகிறது. மது அருந்துதல் கல்லீரல் இதயம் போன்றவற்றை கடுமையாக பாதிக்கும் எனவே மது அருந்துதல் பழக்கத்தை கைவிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

-விளம்பரம்-

மனதிற்கு பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவிடுதல்

மனதிற்கு பிடித்தவர்கள் ஆன நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள் போன்றவர்களோடு வாரத்திற்கு ஒரு முறை முழுமையாக நேரம் செலவிடுதல் நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தத்தை குறைப்பது

வேலை குடும்பம் சமுதாயம் என பலவற்றினால் மன அழுத்தத்தில் இருந்தால் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு தியானம் மேற்கொள்ளுதல் உடற்பயிற்சி செய்தல் யோகா செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால் மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

உடற்பயிற்சி செய்தல்

தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைவது இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும். எனவே தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

ஆரோக்கியமான உணவு முறை

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் தான் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது அதிலும் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் ஏற்படுகிறது எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் கூல்ட்ரிங்ஸ் ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்து தினமும் பழங்கள் காய்கறிகள் கீரைகள் என சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டால் நம்முடைய ஆரோக்கியம் மேம்பட்டு நீண்ட ஆயுளோடு நோய் நொடி இல்லாமல் வாழ முடியும்.

நிம்மதியான உறக்கம்

தினமும் 9 மணி நேரம் நிம்மதியாக எந்த ஒரு எலக்ட்ரானிக்ஸ் சாதனைகளையும் பயன்படுத்தாமல் உறங்க வேண்டும். இந்த உறக்கம் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். தூங்குவதற்கு முன்பாக டீ காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்த்து நிம்மதியாக உறங்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : உடல் எரிச்சல் ஏன் ஏற்படுகின்றனர் ? அதற்கு எளிய வீட்டு மருந்து!