Home உடல்நலம் உடலில் அதிசயத்தை நிகழ்த்தும் சோம்பு தண்ணீர்! சோம்பு தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

உடலில் அதிசயத்தை நிகழ்த்தும் சோம்பு தண்ணீர்! சோம்பு தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

பொதுவாக நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது அந்த வகையில் சீரகம் சோம்பு போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது பலவிதமான மாற்றங்களும் நம் உடம்பில் நிகழும் அந்த வகையில் சோம்பு தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியை தரக்கூடியது மேலும் பல நன்மைகளையும் நமக்கு தரக்கூடியது அதனால் சூடு தண்ணீரை பருகுவதால் இன்னும் நமக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

செரிமான பிரச்சனை

பொதுவாக நாம் அதிகமான உணவுகளை உண்டாலோ அல்லது நமக்கு சாப்பிட்டு உனது செரிமானம் ஆகவில்லை என்றாலும் அதற்காக நாம் கடைகளில் இருந்து சில சூடா நிறைந்த குளிர்பானங்களை வாங்கி அருந்துவோம் ஆனால் அப்படி செயற்கையாக வாங்காமல் இயற்கை முறையிலேயே வீட்டில் சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம் இது செரிமானப் பிரச்சினையை மட்டுமல்லாமல் வாயு பிரச்சனைகளையும் நீக்கி தரக்கூடியது

சரும பிரச்சனை

சோம்பு தண்ணீரில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் கருமைகள் வயதான தோற்றம் போன்றவற்றை சோம்பு தண்ணீர் சரி செய்யும். அரை டீஸ்பூன் சோம்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை என இருவேளைகளிலும் பருகினால் முகத்திற்கு மிகவும் நல்லது

சுவாச புத்துணர்ச்சி

வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் எனவே சோம்பு தண்ணீரை அடிக்கடி குடித்து வருவதால் வாய் துர்நாற்றம் நீங்கி நமக்குள் தன்னம்பிக்கை ஏற்படும்.

மாதவிடாய்

பொதுவாக பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படும் மாதவிடாயின் போது அதிகமான வலி ஏற்படும். அப்பொழுது கடைகளில் இருந்து பல மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அப்படி செயற்கையாக மாதவிடாய் வலியை குணப்படுத்தாமல் இயற்கை முறையில் சோம்பு தண்ணீரை குடித்து வருவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி அதனால் ஏற்படும் வயிறு உப்பசம் அனைத்தும் குணமாகி விடும்

-விளம்பரம்-

உடல் எடையை குறைக்க

பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சீரகம் தண்ணீர் சோம்பு தண்ணீர் போன்றவற்றை கொடுத்து வருவதால் பசி உணர்வை கட்டுப்படுத்தி அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை போக்கி உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவும் எனவே சோம்பு தண்ணீரை பருகி வருவது உடல் எடையை குறைக்க உதவும்

கண்கள் ஆரோக்கியம்

பொதுவாக அனைவரும் போன் லேப்டாப் போன்றவற்றை உபயோகித்துக் கொண்டே இருப்பதால் கண்கள் சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படும் மேலும் வயதானவர்களுக்கும், கண் சம்பந்தமான ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு ஆகவே சோம்பல் வைட்டமின் ஏ இருப்பதால் சோம்பு தண்ணீரை பருகி வருவதால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்

ரத்த சர்க்கரை

இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் உட்பொருள் சோம்பில் நிறைந்துள்ளதால் சோம்பு தண்ணீரை அடிக்கடி குடித்து வருவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சோம்பு தண்ணீர் மிகவும் நல்லது. வளர்சிதை ஆரோக்கியத்திற்கு சோம்பு தண்ணீர் குடித்து வருவது நல்லது

-விளம்பரம்-

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சோம்பு தண்ணீரில் வைட்டமின் சி மற்றும் பிளவனாய்டுகள் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் சோம்பு தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும் மேலும் சளி இருமல் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்