சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் தெரியும்!

- Advertisement -

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நம் உடம்பில் அதிக அளவு சூடு ஏற்பட்டு அதனால் பல விதமான உடல் உபாதைகளும் சரும பிரச்சனைகளும் ஏற்படும். சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதற்கு தகுந்தார் போல் உடை அணிவது சன்ஸ்கிரீன் மற்றும் மற்ற கிரீம்களை உபயோகிப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். ஆனால் என்னதான் நாம் பல முன்னெச்சரிக்கைகளை எடுத்தாலும் நம் உடம்பில் ஏற்படும் அதிக அளவு சூட்டினால் நம் உடம்பில் ஆங்காங்கே கட்டிகள் வருவது முகம் கழுத்து பகுதிகளில் வேர்க்குரு முகம் கருமை அடைவது முகத்தல் சூட்டு கொப்பளங்கள் வருவது என நம் உடம்பில் வெயிலின் தாக்கத்தினால் பலவிதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நம்முடைய சருமமும் கூந்தலும் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கும். எனவே என்னதான் நாம் செயற்கை முறையில் ஆன பல கிரீம்களை பயன்படுத்தினாலும் தலை முதல் பாதம் வரை மேலும் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கையான வழிமுறைகளும் உண்டு அந்த இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

பொதுவாக கோடைகாலத்தில் அடிக்கும் வெயிலை சமாளிப்பதற்காக நாம் அதிக அளவு நீர்ச்சத்து உள்ள காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.. அந்த வகையில் தர்பூசணி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கற்றாழை ஜூஸ் நீர் மோர் இளநீர் என இது போன்றவைகளை சாப்பிட்டால் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்

- Advertisement -

தயிர்

தயிர் இயற்கையாகவே சில கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய தன்மையை கொண்டது. ஏனெனில் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் தயிரை நாம் அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு குளிர்ச்சி கிடைக்கும் மேலும் தயிரை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தினமும் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி கருமையை போக்கும்

வெள்ளரிக்காய்

வெயிலின் தாக்கத்தினால் நாம் பாதிக்கப்படும்போது அந்த தாக்கம் ஒரு சிலருக்கு கண்களில் காட்டும் எனவே அந்த சமயத்தில் கண்களில் வெள்ளரிக்காய் வைத்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைத்து சூடும் குறையும். மேலும் வெள்ளரிக்காயை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் அந்த வெள்ளரிக்காய் ஜூஸை முகத்தில் தடவி வருவது மிகவும் நல்லது.

கற்றாழை ஜெல்

மற்ற அனைத்து பொருட்களை விடவும் கற்றாழை ஜெல் சூட்டை தணிப்பதில் பல மடங்கு சிறந்தது. எனவே கற்றாழை ஜெல்லை முகத்தில் கருமையான இடங்களில் தடவி வந்தால் முகத்திற்கு பளபளப்பு கிடைக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் முகத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் பருக்களுக்கும் நல்லது

-விளம்பரம்-

தேங்காய் எண்ணெய்

இயற்கையாகவே தேங்காய் எண்ணெய்க்கு முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை உண்டு எனவே வேலினால் சருமம் வறண்டு போகும்போது தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம் அல்லது வெயிலில் செல்வதற்கு முன்பாக தேங்காய் எண்ணெயை தேய்த்து விட்டு அதன் பிறகு செல்லலாம்