ருசியான வெஜ் பிரியாணி சாப்பிட நினைத்தால் அவசியம் மிஸ் பண்ணாம இப்படி சுரைக்காய் பிரியாணி செஞ்சி பாருங்க!
நாம் பல வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக சைவம் என்று எடுத்துக் கொண்டால் காய்கறி பிரியாணி , சுண்டல் பிரியாணி, தக்காளி பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, மீன் மேக்கர் பிரியாணி என சாப்பிட்டு இருப்போம். அசைவம் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் ப
நாம் பல வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக சைவம் என்று எடுத்துக் கொண்டால் காய்கறி பிரியாணி , சுண்டல் பிரியாணி, தக்காளி பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, மீன் மேக்கர் பிரியாணி என சாப்பிட்டு இருப்போம். அசைவம் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, கணவாய் பிரியாணி, மீன் பிரியாணி என பிரியாணி வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னதான் இவ்வளவு வகையான பிரியாணி நாம் சாப்பிட்டு இருந்தாலும் சுரைக்காய் பிரியாணி நம் வாழ்நாளில் சாப்பிட்டு இருக்க மாட்டோம் ஆனால் மற்ற பிரியாணிகளின் சுவைக்கு ஈடாக இந்த சுரைக்காய் பிரியாணியின் சுவையும் இருக்கும். நிறைய பேர் என்னது சுரைக்காயில் பிரியாணியா என்று ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் சுரைக்காய் பிரியாணி சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான காய்கறிகளை குழம்பில் பொரியலிலோ போட்டு செய்து கொடுத்தால் சாப்பிடுவது சந்தேகம்தான். ஆனால் அவர்களுக்கு பிடித்தமான பிரியாணியில் இந்த சுரைக்காயை போட்டு சுரைக்காய் பிரியாணியாக செய்து கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையும் மணமும் அருமையாக இருக்கும். நீர் காயான சுரைக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த சுரைக்காயை அவர்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் சுரைக்காயை அடிக்கடி அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவர்களது உணவில் இந்த சுரைக்காயை எடுத்துக் கொண்டால் விரைவில் அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதிரி எண்ணற்ற நன்மைகள் உள்ள சுரைக்காயை எளிமையான முறையில் சுரைக்காய் பிரியாணி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் இப்பொழுது சுரைக்காய் பிரியாணி எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.