நாம் பல வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக சைவம் என்று எடுத்துக் கொண்டால் காய்கறி பிரியாணி , சுண்டல் பிரியாணி, தக்காளி பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, மீன் மேக்கர் பிரியாணி என சாப்பிட்டு இருப்போம். அசைவம் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, கணவாய் பிரியாணி, மீன் பிரியாணி என பிரியாணி வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னதான் இவ்வளவு வகையான பிரியாணி நாம் சாப்பிட்டு இருந்தாலும் சுரைக்காய் பிரியாணி நம் வாழ்நாளில் சாப்பிட்டு இருக்க மாட்டோம் ஆனால் மற்ற பிரியாணிகளின் சுவைக்கு ஈடாக இந்த சுரைக்காய் பிரியாணியின் சுவையும் இருக்கும். நிறைய பேர் என்னது சுரைக்காயில் பிரியாணியா என்று ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் சுரைக்காய் பிரியாணி சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான காய்கறிகளை குழம்பில் பொரியலிலோ போட்டு செய்து கொடுத்தால் சாப்பிடுவது சந்தேகம்தான். ஆனால் அவர்களுக்கு பிடித்தமான பிரியாணியில் இந்த சுரைக்காயை போட்டு சுரைக்காய் பிரியாணியாக செய்து கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையும் மணமும் அருமையாக இருக்கும். நீர் காயான சுரைக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த சுரைக்காயை அவர்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் சுரைக்காயை அடிக்கடி அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவர்களது உணவில் இந்த சுரைக்காயை எடுத்துக் கொண்டால் விரைவில் அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதிரி எண்ணற்ற நன்மைகள் உள்ள சுரைக்காயை எளிமையான முறையில் சுரைக்காய் பிரியாணி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் இப்பொழுது சுரைக்காய் பிரியாணி எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுரைக்காய் பிரியாணி | Bottle Gourd Biryani Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 அரிசி
- 1/4 கிலோ சுரைக்காய்
- 4 பெரிய வெங்காயம்
- 1 பிரியாணி இலை
- 3 கிராம்பு
- 2 பட்டை
- 1 ஏலக்காய்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 3 தக்காளி
- 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 2 டீஸ்பூன் மல்லிதூள்
- 2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 கைப்பிடி அளவு புதினா
- 1 கைப்பிடி அளவு மல்லி இலை
- 4 பச்சை மிளகாய்
- நெய் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 10 முந்திரி
செய்முறை
- முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சிறிதளவுஊற்றி அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை, சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வாங்கிய பின்னர் தக்காளியைசேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின்பு அதில் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.இப்பொழுதுஅதில் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துவதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் புதினா மற்றும் மல்லி இலைகளை போட்டு சுருள வதக்கி எண்ணெய் பிரியும் வரை காத்திருக்கவும். என்னை பிரிந்த பின்னர் இரண்டு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
- தண்ணீர் கொதித்த உடன் அரிசியை போட்டு இரண்டு விசில் விட வேண்டும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் கடலைப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் இரண்டு விசில் வந்ததும் சிறிது நேரத்திற்கு பிறகு குக்கரை திறந்து வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கடலை பருப்பை போட்டு லேசாக கிளறி விட வேண்டும்.இப்பொழுது சுடச்சுட சுரைக்காய் பிரியாணி தயார்.