Advertisement
சைவம்

புதுவிதமான ருசியில் மோர் குழம்பு சுரைக்காய் சேர்த்து ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

Advertisement

மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த சுரைக்காய் மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது.  நீங்கள் இப்போது தான் சமைக்க தொடங்கியவர்களாக இருந்தாலும் கூட, இந்த சுரைக்காய் மோர் குழம்பை சுலபமாக, சுவையாக செய்து அசத்தி விடலாம்.

மோர் குழம்பு செய்வது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான். மோர்  பெரும்பாலும் மோர் திரிந்து விடுவது உண்டு. குறிப்பாக புதிதாக மோர் குழம்பு செய்பவர்கள் கட்டாயம் மோரை திரித்து விடுவார்கள். அது போல் சுவையுடன் கூடிய மோர் குழம்பு சுரைக்காய் இல்லாமல் பத்தே நிமிடத்தில் செய்து விடலாம்.  தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுரைக்காய் போட்டு வித்தியாசமா இப்படி மோர்க்குழம்பு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. வெயில் காலத்தில் புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளை விட, இப்படி தயிர் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வயிற்றுக்கும், மனதிற்கும் நிறைவாக இருக்கக்கூடிய இந்த ‘சுரைக்காய் மோர் குழம்பு’ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisement

சுரைக்காய் மோர்க்குழம்பு | Bottle gourd Morkulambu In Tamil

Print Recipe
மோர் குழம்பு செய்வது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான். மோர்  பெரும்பாலும் மோர் திரிந்துவிடுவது உண்டு. குறிப்பாக புதிதாக மோர் குழம்பு செய்பவர்கள் கட்டாயம் மோரை திரித்துவிடுவார்கள். அது போல் சுவையுடன் கூடிய மோர் குழம்பு சுரைக்காய் இல்லாமல் பத்தே நிமிடத்தில்செய்து விடலாம்.  தினமும் ஒரே மாதிரியான குழம்புசெய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுரைக்காய்
Advertisement
போட்டு வித்தியாசமா இப்படி மோர்க்குழம்புசெய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. வெயில் காலத்தில்புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளை விட, இப்படி தயிர் சேர்த்து செய்யப்படும்குழம்பு வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வயிற்றுக்கும், மனதிற்கும் நிறைவாக இருக்கக்கூடியஇந்த ‘சுரைக்காய் மோர்குழம்பு’ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Kulambu, LUNCH
Cuisine tamilnadu
Keyword Bottle Guard Morkulambu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 143

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 1/2 கப் சுரைக்காய் நறுக்கிய துண்டுகள்
  • 1 கப் மோர்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 3 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • எண்ணெய் தாளிக்க
  • உப்பு தேவையானஅளவு

அரைக்க

  • 2 மேசைக்கரண்டி தேங்காயத்துருவல்
  • 5 பச்சை மிளகாய்

Instructions

  • சுரைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு சில நொடிகள் வறுக்கவும்.
  • பிறகு இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கூடவே நறுக்கி வைத்த சுரைக்காய், மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.
  • காய் சில நிமிடங்கள் வதங்கியதும், அதனுடன் அரைத்து வைத்த தேங்காய், பச்சை மிளகாய் விழுதை போட்டு, சிறிது வதக்கி, ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். காய்க்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
  • இதனை மூடிப்போட்டு சில நிமிடங்கள் காய் வேகும் வரை விடவும். காய் வெந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, மீதி உள்ள உப்பு, மோர் இரண்டையும் விட்டு கலந்து விடவும். மோர் விடும்போது அடுப்பை குறைந்த தீயீல் வைக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட்டால், மோர் திரிந்துவிடும். லேசாக ஒரு கொதி வரவிருக்கும் நிலையில், அடுப்பை அணைத்து விடவும்.
  • சுவையான சுரைக்காய் மோர்க்குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 143kcal | Carbohydrates: 63g | Protein: 22g | Fat: 2g | Sodium: 1300mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

45 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago