மோர்க் குழம்பில் பலவகை உண்டு. ஒவ்வொருவர் வீட்டிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி மோர்குழம்பு வைப்பார்கள். இப்போது நாம் தெரிந்துகொள்ள போகும் இந்த சுரைக்காய் மோர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமானது. நீங்கள் இப்போது தான் சமைக்க தொடங்கியவர்களாக இருந்தாலும் கூட, இந்த சுரைக்காய் மோர் குழம்பை சுலபமாக, சுவையாக செய்து அசத்தி விடலாம்.
மோர் குழம்பு செய்வது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான். மோர் பெரும்பாலும் மோர் திரிந்து விடுவது உண்டு. குறிப்பாக புதிதாக மோர் குழம்பு செய்பவர்கள் கட்டாயம் மோரை திரித்து விடுவார்கள். அது போல் சுவையுடன் கூடிய மோர் குழம்பு சுரைக்காய் இல்லாமல் பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுரைக்காய் போட்டு வித்தியாசமா இப்படி மோர்க்குழம்பு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. வெயில் காலத்தில் புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளை விட, இப்படி தயிர் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வயிற்றுக்கும், மனதிற்கும் நிறைவாக இருக்கக்கூடிய இந்த ‘சுரைக்காய் மோர் குழம்பு’ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சுரைக்காய் மோர்க்குழம்பு | Bottle gourd Morkulambu In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் சுரைக்காய் நறுக்கிய துண்டுகள்
- 1 கப் மோர்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1/4 தேக்கரண்டி கடுகு
- 3 காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் தாளிக்க
- உப்பு தேவையானஅளவு
அரைக்க
- 2 மேசைக்கரண்டி தேங்காயத்துருவல்
- 5 பச்சை மிளகாய்
செய்முறை
- சுரைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்.
- தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும், சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு சில நொடிகள் வறுக்கவும்.
- பிறகு இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கூடவே நறுக்கி வைத்த சுரைக்காய், மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.
- காய் சில நிமிடங்கள் வதங்கியதும், அதனுடன் அரைத்து வைத்த தேங்காய், பச்சை மிளகாய் விழுதை போட்டு, சிறிது வதக்கி, ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். காய்க்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- இதனை மூடிப்போட்டு சில நிமிடங்கள் காய் வேகும் வரை விடவும். காய் வெந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, மீதி உள்ள உப்பு, மோர் இரண்டையும் விட்டு கலந்து விடவும். மோர் விடும்போது அடுப்பை குறைந்த தீயீல் வைக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட்டால், மோர் திரிந்துவிடும். லேசாக ஒரு கொதி வரவிருக்கும் நிலையில், அடுப்பை அணைத்து விடவும்.
- சுவையான சுரைக்காய் மோர்க்குழம்பு தயார்.