வார இறுதியில் மட்டன் மூளை வாங்கி ருசியான ஒரு ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

அசைவ உணவுகளில் மட்டன் என்றால் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் தனி சுவையே ஆகும். மேலும் மட்டன் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக மட்டன் வைத்து வறுவல், குழம்பு, ஈரல் ஃபிரை, குடல் குழம்பு, மட்டன் கிரேவி, ரத்தப் பொறியல், நல்ல

By Prem Kumar · 3/5/2026

அசைவ உணவுகளில் மட்டன் என்றால் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் தனி சுவையே ஆகும். மேலும் மட்டன் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக மட்டன் வைத்து வறுவல், குழம்பு, ஈரல் ஃபிரை, குடல் குழம்பு, மட்டன் கிரேவி, ரத்தப் பொறியல், நல்லி சாப்ஸ், மூளை ஃபிரை, தலைக்கறி, சுவரொட்டி என ஆட்டின் வாலைத் தவிர ஏகப்பட்ட வெரைட்டிகளை பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆக பிரித்து பிரித்து செய்யலாம் என்றால் அது மட்டனில் மட்டும் தான் முடியும்.

அந்த வகையில் நீங்களும் வார விடுமுறையில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் ஒரே மாதிரி மட்டன் ரெசிபி செய்து அலுத்து போய் விட்டாதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் நன்கு காரசாரமாக மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து சுவையான ஒரு மூளை ரோஸ்ட் எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம்.

வழக்கமான சிக்கன், மட்டன் குழம்புகளுக்கு மத்தியில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மட்டன் மூளை ரோஸ்ட் ஒரு சிறந்த தேர்வாகும். ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமாக செய்யப்படும் இந்த மூளை ரோஸ்ட், ரசம் சாதம், அசைவ உணவுகள் அல்லது சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அபாரமாக இருக்கும். இல்லையெனில் இதை அப்படியே சாப்பிடலாம். மிகக் குறைந்த நேரத்தில், எளிமையான பொருட்களைக் கொண்டு சுவையான மூளை ரோஸ்ட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

Recipes AMP · Quick view
View full