- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
அசைவ உணவுகளில் மட்டன் என்றால் அனைத்து வயதினரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் தனி சுவையே ஆகும். மேலும் மட்டன் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பொதுவாக மட்டன் வைத்து வறுவல், குழம்பு, ஈரல் ஃபிரை, குடல் குழம்பு, மட்டன் கிரேவி, ரத்தப் பொறியல், நல்லி சாப்ஸ், மூளை ஃபிரை, தலைக்கறி, சுவரொட்டி என ஆட்டின் வாலைத் தவிர ஏகப்பட்ட வெரைட்டிகளை பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆக பிரித்து பிரித்து செய்யலாம் என்றால் அது மட்டனில் மட்டும் தான் முடியும்.
அந்த வகையில் நீங்களும் வார விடுமுறையில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? எப்போதும் ஒரே மாதிரி மட்டன் ரெசிபி செய்து அலுத்து போய் விட்டாதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் நன்கு காரசாரமாக மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து சுவையான ஒரு மூளை ரோஸ்ட் எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம்.
வழக்கமான சிக்கன், மட்டன் குழம்புகளுக்கு மத்தியில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த மட்டன் மூளை ரோஸ்ட் ஒரு சிறந்த தேர்வாகும். ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமாக செய்யப்படும் இந்த மூளை ரோஸ்ட், ரசம் சாதம், அசைவ உணவுகள் அல்லது சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அபாரமாக இருக்கும். இல்லையெனில் இதை அப்படியே சாப்பிடலாம். மிகக் குறைந்த நேரத்தில், எளிமையான பொருட்களைக் கொண்டு சுவையான மூளை ரோஸ்ட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
முதலில் மூளையை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மூளையை சேர்த்து சிறிதளவு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் வறுத்து வைத்துள்ள மூளையை துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு சிறிதளவு மட்டன் குழம்பு சேர்த்து நன்கு வதக்கி மிளகு தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மூளை ரோஸ்ட் தயார்.






